Cuddalore

News June 25, 2024

சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கிராம சுகாதார செவிலியர்களை துணை சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்களில் உடனடியாக நிரப்பிட வேண்டியும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டேட்டா ஆப்ரேட்டர் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News June 25, 2024

அக்னிபாத் ஆட்சேர்ப்புக்கு ஆட்சியர் அழைப்பு

image

அக்னிபாத் திட்டத்தின்கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண்கள் ஜூலை 8 முதல் ஜூலை 28 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அக் 10 அன்று நடத்தப்படும். கல்வித் தகுதி 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் மொத்தமாக 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

News June 25, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன்

image

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி பயனாளிகள் 30 பேருக்கு வங்கி கடன் மானியத்திற்கான செயல்முறை ஆணையை வழங்கினார். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News June 24, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து போலீசார் முழு விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசார் விவரம் வெளியிடப்பட்டது. அதன்படி கடலூரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கவியரசன், மணிவண்ணன், சிதம்பரத்தில் இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், விருத்தாசலத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், ராமலிங்கம், நெய்வேலியில் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தனசீலன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News June 24, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன்

image

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி பயனாளிகள் 30 பேருக்கு வங்கி கடன் மானியத்திற்கான செயல்முறை ஆணையை வழங்கினார். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News June 24, 2024

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

image

கடலூரில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 28-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.அதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். மேலும் கூட்டத்தில் கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் 28-ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

News June 24, 2024

கடலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 

image

கள்ளச்சாராய மரணத்தை கண்டித்தும்,கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும்,சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும்,கடலூரில் இன்று காலை அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். இதனால் அங்கு போலீஸ் குவிப்பு

News June 24, 2024

கடலூர் கலெக்டரிடம் மனு

image

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது,முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இதில் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.இதில் பெரும்பாலானோர் சொந்த வீடு இன்றி வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் எங்களுக்கு அரசு இலவச மனை பட்டாவை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

News June 24, 2024

கடலூர்: முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு

image

கடலூர் உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக அனைத்து வகை காய்கறிகளின் விலைகளும் உயர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் இன்று கிடுகிடுவென விலை உயர்ந்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல் பிடி கருணை 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

News June 24, 2024

கடலூர்: வீடு கட்ட ஆணை வழங்கிய அமைச்சர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நீர்வளத் துறை சார்பில் ரூ.81.12 கோடி மதிப்பீட்டிலான கொள்ளிடம் வடிநிலக் கோட்டம் அருவாள்மூக்கு வெள்ளத் தடுப்பு திட்டப்பணிகள் நேற்று கடலூர் அருகே திருச்சோபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் வீடுகட்டுவதற்கான ஆணைகள் மற்றும் காசோலையை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் வழங்கினார்.

error: Content is protected !!