India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்னிந்திய அளவிலான கபடி போட்டி, கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடியில் நடைபெற்றது. இதில் உண்ணாமலை செட்டியைச் சார்ந்த ராஜா பிரதர்ஸ் கபடி அணி 2 ஆம் இடம் பிடித்து ரூ.30,000 பரிசுத் தொகை மற்றும் கோப்பையை வென்றது. இதை அடுத்து வெற்றி பெற்ற உண்ணாமலை செட்டி சாவடி ராஜா பிரதர்ஸ் கபடி அணிக்கு அப்பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூன் 26) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் கல்பனா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (26/06/2024) புதன்கிழமை எள் வரத்து 2.65 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.

உலக போதை ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி.இராஜாராம் தலைமையில் போலீசார் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.இதில் டி.எஸ்.பி.க்கள் சௌமியா, நாகராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், காவல் ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன், தனிபிரிவு உதவி ஆய்வாளர் முகமது நிசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 22 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.இந்த பணியிடம் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேமுதிக சார்பில் மாவட்ட கழக செயலாளர் மாஜி எம்எல்ஏ சிவக்கொழுந்து தலைமையில் மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையை தடுத்த தவறிய மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும், கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஜூலை 9ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறைக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் ஜூலை மாதம் 8ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் 8,165 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.52,39,17,045 மதிப்பில் பராமரிப்பு உதவிதொகை, 2,277 பேருக்கு கல்வி உதவிதொகை, 1,249 பேருக்கு ரூ.1,51,35,536 மதிப்பில் இலவச பேருந்து பயண சலுகை அட்டைகள் உள்பட மொத்தம் 50,236 பேருக்கு ரூ.61,57,34,367 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் வாயிலாக நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நடைபெறும் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

புவனகிரி பகுதியை சேர்ந்த செல்வகுமாருக்கும் சின்னசேலத்தை சேர்ந்த சூர்யாவுக்கும் கடந்த 17.9.2023 திருமணம் நடந்தது. இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று சூர்யாவின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு வந்த செல்வகுமார், சூர்யாவின் உறவினர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.