Cuddalore

News July 5, 2024

சிதம்பரம்: ரூ.255 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்

image

சிதம்பரம் நகரப் பகுதியில் ரூ.255 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கடந்த மாதம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் இதுவரை 5% முடிவடைந்துள்ளது. இதுகுறித்து நகர்மன்ற தலைவர் செந்தில்குமார் கூறியதாவது, அடுத்த 30 ஆண்டுகளுக்கு சிதம்பரத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என தெரிவித்தார்.

News July 4, 2024

இரவு ரோந்துப் பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று (ஜூலை 4ம் தேதி) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ராஜாராமன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் விநாயகம், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன், நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் ரோந்துப் பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News July 4, 2024

கடலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இரவு 8.30 வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News July 4, 2024

கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 88 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

News July 4, 2024

கடலூர் இசைப்பள்ளியில் கிராமிய கலை பயிற்சி

image

கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தெருக்கூத்து, கரகாட்டம், கிராமிய நையாண்டி மேளத்தவில் , வில்லுப்பாட்டு ஆகிய கலைகளில் வாரம் 2 நாட்கள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. கலை ஆர்வமுடையவர்கள் மட்டுமல்ல கலைஞர்களும் அரசின் சான்றிதழ் பெறும் வகையில் இவ்வகுப்பில் சேர இசைப்பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 

News July 4, 2024

பங்கில் பதுக்கிய 2000 லிட்டர் மெத்தனால்

image

கள்ளச்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அவ்வழக்கில் கைதான மாதேஷ் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூரில் செயல்படாத பெட்ரோல் பங்கை குத்தகைக்கு எடுத்து 2,000 லிட்டர் மெத்தனாலை பதுக்கியதாக சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

News July 4, 2024

கடலூர்: ஜூன் 15 கடைசி நாள்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 15ஆம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதனால், அரசு மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தொழிற்பிரிவு விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம் என கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

கலெக்டரிடம் விஏஓக்கள் கோரிக்கை மனு

image

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருடாந்திர பொது கலந்தாய்வு நடத்த வேண்டும். மாவட்ட வருவாய் அலகில் பணிபுரியும் புதிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அப்போது செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

News July 3, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 3) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் தனபால், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாத்தா, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் சேத்தியாத்தோப்பில் உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 3, 2024

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட படைவீரர் மாளிகையில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் துப்புரவுப் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவில் பதிவு செய்துள்ள 55 வயதிற்குட்பட்ட கடலூரில் வசிக்கும் முன்னாள் படைவீரர்கள், கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!