Cuddalore

News July 7, 2024

இலவச பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்த ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட மைய நூலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று (ஜூலை 7) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News July 7, 2024

டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் தொடங்கியது

image

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குருப் 2 மற்றும் 2ஏ பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கியது. தொடக்க விழாவிற்கு மாவட்ட மைய நூலகர் சக்திவேல் வரவேற்பு உரை ஆற்றினார் சிறப்பு விருந்தினராக கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நீங்கள் அனைவரும் நாளைய அதிகாரிகள் ஆக வேண்டும் அதற்கு நீங்கள் அதிகப்படியான உழைப்பை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

News July 7, 2024

பாமக பிரமருக்கு அரிவாள் வெட்டு

image

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் பாமக பிரமுகர் சிவசங்கர் மீது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று (ஜூலை 6) கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவசங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை வெறித் தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 6, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி, இன்று கடலூரில் 32 டிகிரி செல்சியஸ், சிதம்பரத்தில் 33 டிகிரி செல்சியஸ், புவனகிரியில் 33 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயிலில் 33 டிகிரி செல்சியஸ், நெய்வேலியில் 33 டிகிரி செல்சியஸ், விருத்தாசலத்தில் 34 டிகிரி செல்சியஸ், திட்டக்குடியில் 34 டிகிரி செல்சியஸ், மற்றும் குறிஞ்சிப்பாடியில் 33 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News July 6, 2024

கடலூர்: பாமக பிரமருக்கு அரிவாள் வெட்டு

image

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் பாமக பிரமுகர் சிவசங்கர் மீது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் இன்று (ஜூலை 6) கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவசங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை வெறித் தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 6, 2024

அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்!

image

கடலூரில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு பேசுகையில், கஞ்சா விற்பனை தொடர்பாக காவல்துறைக்கு 7418846100 என்ற எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார். மேலும் கஞ்சா விற்பனையில் அதிகாரிகள் மீது தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News July 6, 2024

கடலூர்: கர்ப்பிணிகளுக்கு இது முக்கியம்

image

கடலூர் மாவட்டத்தில் பிரசவகால தாய்சேய் பராமரிப்பை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், ‘வம்ஸம் ‘ ஹாட்லைன் எனும் திட்டத்தினை ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிமுகப்படுத்தினார்.  இந்த திட்டத்தின் மூலம் கர்ப்பிணிகள் 24 மணி நேரமும் பிரசவம் தொடர்பான சந்தேகங்களை 75985 12045, 75985 12042 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று தெரிவித்தார்.

News July 6, 2024

கடலூர்: துவரம் பருப்பு வாங்க அவகாசம் நீட்டிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், ஜூன் 2024 மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத்திட்ட அத்தியாவசிய பொருட்களான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கிடைக்க பெறாத குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் ஜூலை 31ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News July 5, 2024

கடலூர்: கல்வி உதவித்தொகை

image

கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30ம் தேதி வரை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

கடலூர்: மண் அள்ள அனுமதி

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் சேர்ந்துள்ள வண்டல் மண் மற்றும் களிமண் போன்ற கனிமங்களை விவசாயிகள் பயன்பாட்டிற்காகவும், பொது பயன்பாட்டிற்காகவும் மற்றும் குயவர்கள் பயன்பாட்டிற்காகவும் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு பொதுமக்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, சம்மந்தப்பட்ட தாசில்தாரை அணுகி அனுமதி பெற்று பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!