India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூரில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 3 ஆம் கட்ட கலந்தாய்வு நாளை (ஜூலை.11), நாளை மறுநாள் (ஜூலை.12) நடைபெறுகிறது. இதில் கட்- ஆப் 400 மதிப்பெண்களில் இருந்து 140 மதிப்பெண்கள் வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்விற்கான (SGT) முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் தலைமையில் மாவட்ட அளவிலான தேர்வு கண்காணிப்புக்குழு கூட்டம் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் ஒன் பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 662 பேர் எழுத உள்ளனர். தேர்வு மையத்திற்கு காலை 9 மணி வருகை புரிய வேண்டும், ஹால் டிக்கெட்டுடன் வர வேண்டும், ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டுவர வேண்டும் என கடலூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் எடக்குப்பம், அகரம், கொம்பாடிக்குப்பம, விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம கரும்பு விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கினர். அதில், சிறப்பு பட்டத்தில் சாகுபடி செய்த கரும்பு பயிரை ஆலைகளுக்கு வெட்டி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இந்நிலையில், இன்று நடந்த குறைதீர் கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச வீடு, பட்டா, தையல் இயந்திரம், வேலை வாய்ப்பு உள்பட மொத்தம் 740 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் பரிந்துரைத்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜை கடலூர் மாவட்ட அனைத்து குடியிருப்போர் நல சங்கத்தினர் நேரில் சென்று சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சிகளில் சிதிலமடைந்து போன குடிநீர் குழாயை அகற்றிவிட்டு, புதிய பரிசோதிக்கப்பட்ட பாதுகாப்பான குழாய் அமைத்து மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

தமிழ்நாடு அரசு புவியியல் துறை சார்பில் வண்டல் மண்களை விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் இலவசமாக எடுத்துக் கொள்ளவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் வண்டல் மண் இலவசமாக பயனாளிகள் எடுத்துக் கொள்ளும் ஆணை வழங்கும் நிகழ்ச்சியை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் இன்று துவக்கி வைத்தார்

மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களின் வாரிசுகள் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படையில் சேர்வதற்காக, கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 3 மாத கால இலவச பயிற்சியானது இன்று முதல் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் பிரசவகால தாய் சேய் பாரமரிப்பை கண்காணிக்கவும், அவர்களை பாதுகாத்து வழிநடத்த மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு மருத்துவமனையுடன் இணைந்து ஆட்சியர் அருண்தம்புராஜ் ‘வம்சம்’ஹாட்லைன் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதில் ஆதரவற்ற, கைவிடப்பட்ட, திருமணமாகாத கர்பிணிகள் மருத்துவ பரிசோதனை, சந்தேகங்களுக்கு 75985 12045, 75985 12042 என்ற எண்களை 24 மணி நேரமும் அழைக்கலாம்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை7) கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறிஞ்சிப்பாடியில் 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.