Cuddalore

News July 12, 2024

கடலூரில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

கடலூர் உட்பட்ட சில மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு எற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் முழுவதும் வெயில் வாட்டிய நிலையில் இரவு குளிர்ச்சியான வானிலை நிலவ வாய்ப்புள்ளது.

News July 12, 2024

பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்

image

கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாசில்தார் அலுவலகங்களில் நாளை (ஜூலை.13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும் என கடலூர் ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

கடலூர் மருத்துவமனையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

image

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை 11) கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்பிராஜ் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

News July 11, 2024

தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழ் செம்மல் விருது

image

தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்ச்சங்கங்கள் வைத்து அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2024ஆம் ஆண்டிற்கான விருதுக்கு www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தன்விவரக் குறிப்புடன் நிழற்படம் மற்றும் தமிழுக்கு ஆற்றிய பணி குறித்த விவரங்களுடன் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க தலைவர் பொறுப்பேற்பு

image

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் பிரதான இணைப்பு சங்கமான தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் வேதாந்த தேசிக ராமானுஜம் ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்றதால், கடலூர் BEO அலுவலகத்தில் பணிபுரியும் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தேவ.முரளி தலைவராக தற்போது பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து புதியதாக பொறுப்பேற்ற தேவ.முரளிக்கு சங்க நிர்வாகிகள் இன்று வாழ்த்து தெரிவித்தனர்.

News July 11, 2024

பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது

image

தமிழக அரசு வீர தீர செயல்புரிந்த பெண்களுக்கு சுதந்திர தினத்தன்று கல்பனா சாவ்லா விருது வழங்கி வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டில் வீர தீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள் விருது பெற https://awards.tn.gov.in என்ற தமிழக அரசின் விருது இணையத்தில் 15.7.2024 க்குள் விண்ணப்பித்து அதன் நகலை மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

இரவு ரோந்துப் பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று (ஜூலை 10) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் அய்யனார், நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் சேத்தியாத்தோப்பில் உதவி ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் ரோந்துப் பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2024

வட்டாட்சியர் அலுவலகங்களில் 13ஆம் தேதி முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் ஜூலை 13ஆம் தேதி பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. அதனால் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம்  தொடர்பான மனுக்களை முகாமில் அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

மக்களுடன் முதல்வர் – ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மேல்புவனகிரி, குமராட்சி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், விருத்தாசலம், மங்களூர், நல்லூர் ஆகிய 14 ஊராட்சிகளில் உள்ள 683 கிராம பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு திட்டத்தின்கீழ் வரும்  11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 91 முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் அருண்தம்புராஜ்  தெரிவித்துள்ளார். 

News July 10, 2024

சிதம்பரம் கனகசபை விவகாரம் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

image

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன நிகழ்ச்சியின்போது பக்தர்கள் கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கக் கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கனகசபை விவகாரத்தில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி, அறநிலையத்துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

error: Content is protected !!