India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு 2 நாள் (பிப்.21, பிப்.22) சுற்றுப்பயணமாக வருகை தர உள்ளார். கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் அரசு விழாவில் முதல்வா் பங்கேற்று, பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து, அரசின் நலத் திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்க உள்ளாா்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 9.30 மணியளவில் புதுச்சேரி புறப்பட்டு, மதியம் 12.30 மணியளவில் புதுச்சேரி வந்தடைவார், மாலை 4.30 மணிக்கு கடலூர் புறப்பட்டு, மாலை 5.15 மணியளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாலை 6.30 மணியளவில் நெய்வேலி புறப்பட்டு, இரவு 7.30 மணியளவில் நெய்வேலி விருந்தினர் மாளிகை வருகை தர உள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்டம், திருப்பெயரில் நடைபெற உள்ள ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ மண்டல மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், மாநாட்டில் விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே எழுந்துள்ளது.
கடலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுவுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அரசு மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். 35 முதல் 65 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் அல்லது <
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அமைந்துள்ள பூவராக சுவாமி கோயிலின் நுழைவாயிலில் ஏழு-அடுக்கு ராஜகோபுரம் உள்ளது. வருடத்தில் ஏப்ரல் – மே மாதங்களில் 3 திருவிழாக்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாக்கள் அப்பகுதியில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அடையாளப்படுத்துகிறது. இரதத்தின் கொடியை முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர். நீங்கள் இந்த கோயிலுக்கு சென்றுள்ளீர்களா? கமெண்ட் பண்ணுங்க.SHARE NOW.
ஸ்ரீமுஷ்ணம் மேல் புளியங்குடியை சேர்ந்தவர் ஆனந்த் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சிறுவன் மறுத்த நிலையில், 3.10.2023 அன்று மாணவனை ஆனந்த் கத்தியால் குத்தியுள்ளார். இதில் மாணவன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். விசாரணையில் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக் கல்லூரி மாணவி ஒருவருக்கு, அதே கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரியும் சிதம்பரநாதன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி சிதம்பரம் மகளிர் போலீசில் அளித்த புகாரில், போலீசார் சிதம்பரநாதனை கைது செய்தனர். நேற்று சென்னை கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவள்ளி, இதுதொடர்பாக விசாரணை செய்து, சிதம்பரநாதனை சஸ்பெண்ட் செய்தார்.
தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பவஸ்ரீ என்ற குழந்தை வழி தெரியாமல் வந்துவிட்டது. தந்தை பெயர் வல்லராஜ் என்று தெரிகிறது. இந்த நிலையில் குழந்தை பவஸ்ரீ தற்போது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் குழந்தை உள்ளது. குழந்தையின் பெற்றோர் உடனடியாக வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உதவி ஆய்வாளர் பிரசன்னாவை 9941408190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
திருவந்திபுரம் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவில், தென்னிந்தியாவில் ஹயக்ரீவருக்கான ஒரே புராதான கோவிலாக கருதப்படுகிறது. ஹயக்ரீவர், கல்வி மற்றும் ஞானத்தின் கடவுளாக போற்றப்படுகிறார். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். குழந்தைகள் கல்வியில் சிறக்க இங்கு வந்து தரிசிப்பது சிறப்பு.
தமிழக முதல்வர் அரசு விழா பாதுகாப்பு முன்னேற்பாடு கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐ.பி.எஸ், முதலமைச்சரின் பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன், நல்லதுரை மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.