Cuddalore

News July 14, 2024

பண்ருட்டி எம்.எல்.ஏ அறிக்கை

image

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காடு இடஒதுக்கீடு, 15 வகையான மேற்படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்

image

கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச் அமைந்துள்ளது. கடலூர் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக காணப்படும் சில்வர் பீச்சில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் விடுமுறை தினமான இன்று மாலை கடலூர் மாநகர மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் நேரத்தை கழிக்க சில்வர் பீச்சுக்கு வந்தனர். இதனால் சில்வர் பீச்சில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

News July 14, 2024

கண்ணாடி மணி கண்டெடுப்பு

image

மருங்கூரில் ஜூன்.19 இல் அகழாய்வுப் பணிகளை முதல்வா் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா். அதில் இராசராசன் காலச் செம்புக் காசும் சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது பச்சை நிறத்திலான கண்ணாடி மணி ஒன்று கிடைத்துள்ளது. உருளை வடிவிலான இக்கண்ணாடி மணி 12.5 மி.மீ நீளமும் 8 மி. மீ விட்டமும் 0.45 கிராம் எடை உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 1-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டி தேர்வு நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அனைத்து பள்ளிகளின் மையத்திலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் நேற்று (ஜூலை 13) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News July 13, 2024

கடலூர் மாவட்ட வெப்பநிலை விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததால் இன்று வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது. இந்நிலையில் கடலூர் 34 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 36 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News July 13, 2024

கடலூரில் மழைக்கு வாய்ப்பு

image

கடலூர் உட்பட 13 மாவட்டங்களுக்கு இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு எற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்த மழையை தொடர்ந்து இன்றும் மழை பெய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

News July 13, 2024

கடலூரில் திமுக-வினர் வெற்றி கொண்டாட்டம்

image

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி
விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதையடுத்து, கடலூர் மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் ராஜா தலைமையில், மாநகர மேயர் சுந்தரி ராஜா முன்னிலையில் இன்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

News July 13, 2024

கடந்த 24 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை 11 மணி வரை பெய்ததால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் கீழச்சேர்வை பகுதியில் 23 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லக்கூர் பகுதியில் மட்டும் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

News July 13, 2024

கடலூரில் ரூ.65 லட்சம் பறிமுதல்

image

கடலூரில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவிலரில் வந்த 2 பேரிடம் ரூ.65 லட்சம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர்கள் தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் வைக்க கொண்டு செல்வதாக கூறினர். இருப்பினும் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வங்கி அதிகாரிகள் வந்து உரிய ஆவணத்தை காண்பித்ததால் பணத்தை திருப்பி ஒப்படைத்தனர்.

News July 12, 2024

கல்விக்கடன் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

image

கடலூர், மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு கல்விக்கடன் எளிதில் கிடைத்திட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!