India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்னிந்திய அளவிலான 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு கபடிபோட்டி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட கபடி அணி சார்பில் காவல்துறை சிறப்பு உதவிஆய்வாளர் கதிரவன் தலைமையில் தலைமை காவலர்கள் ஞானமுருகன், குணசேகரன் உட்பட 10 வீரர்கள் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றனர். இதையடுத்து கோப்பையை வென்ற கபடி வீரர்களை கடலூர் எஸ்.பி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர். அருண் தம்புராஜ் பணி செய்து வந்தார். இவர் தற்போது பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சி.பி ஆதித்ய செந்தில்குமார் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புவனகிரி அடுத்த ஜெயங்கொண்டானில் நேற்று வடகரை பகுதியை சேர்ந்த பிரபுவுக்கும்(29), 17 வயதான சிறுமிக்கும் திருமணம் நடக்கவிருந்தது. இதுபற்றி தகவலறிந்த வட்டார மகளிர் ஊர்நல அலுவலர் பஞ்சவர்ணம் தலைமையிலான அதிகாரிகள் சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமியை திருமணம் செய்ய இருந்த பிரபு (29) மற்றும் உடந்தையாக இருந்த 4 பேர் மீது மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <

கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமலுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் செயலாளர் சுந்தரராஜன் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டிஆர்ஓ ராஜசேகர் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.

கடலூர் அருகே காரமணிக்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.3 பேர் கொல்லப்பட்ட பிறகு எரித்து கொல்லப்பட்டதாக நேற்றைய விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்பி, 5 தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.கொலைக்கான காரணம் குறித்து கடலூர் காவல்துறை விசாரிக்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது.கடலூர் 32 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 32 டிகிரி செல்சியஸ், புவனகிரி 32 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 32 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 33 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 33 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 15) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரைக்காடு ஊராட்சி, கண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அன்னவள்ளி மற்றும் இராமாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெறும் மக்களுடன் முதல்வர் – ஊரகம் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் இன்று (ஜூலை 15) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.