Cuddalore

News July 18, 2024

மூன்று பேர் கொலை வழக்கில் 2 பேர் பிடிபட்டனர்

image

கடலூர் அருகே ஐ.டி ஊழியர் உட்பட அவரது குடும்பத்தினர் இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்டு உடல்கள் எரிக்கப்பட்டன. கொலை தொடர்பாக போலீசார் 7 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ராஜாராம் நகரை சேர்ந்த இளைஞரை சென்னையில் தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் கொலை குறித்த விசாரானை நடைபெற்று வருகிறது.

News July 18, 2024

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மற்றும் கொலை வழக்கை சிபிஜ விசாரிக்க கோரியும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தணிகைச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் அமர்நாத் வரவேற்புரையாற்றினார். இதில் அக்கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

News July 18, 2024

கடலூர் – புதுவை சாலையில் போக்குவரத்து மாற்றம்

image

கடலூர்-புதுச்சேரி சாலையில் நைனார்மண்டபத்தில் அமைந்துள்ள நாக முத்துமாரியம்மன் கோவிலின் 41-ஆம் ஆண்டு செடல் திருவிழா நாளை(ஜூலை19) நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகம் என்பதால், கடலூரிலிருந்து பாண்டி செல்லும் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நாளை மதியம் 2 மணி முதல் தவளக்குப்பம் சந்திப்பிலிருந்து வில்லியனூர் வழியாக புதுச்சேரி செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

கடலூர் மாவட்டத்தில் நேற்றைய முழு வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பரவலாக சாரல் மழை பெய்ததால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று(17) கடலூர் 32 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 34 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக பதிவாகியது.

News July 18, 2024

3 பேர் எரித்து கொலை: கைரேகை நிபுணர்கள் ஆய்வு

image

கடலூர், நத்தப்பட்டு அடுத்த காராமணிக்குப்பத்தில் கடந்த திங்கட்கிழமை 3 பேர் கொலை செய்யப்பட்டு, உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் இன்று டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் மீண்டும் கொலை நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர்.

News July 17, 2024

பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்த மேயர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி, தற்போது மாநில சுகாதாரத்துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள அருண்தம்புராஜை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா இன்று நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரபலங்கள் பலர் ஆட்சியர் அருண் தம்புராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News July 17, 2024

பணியிட மாற்றம்: ஆட்சியரை சந்தித்த அமைச்சர்

image

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து பணி மாறுதலில் செல்லும் அருண் தம்புராஜை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

News July 17, 2024

கிணற்றில் விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு

image

திட்டக்குடி அடுத்த வடகராம்பூண்டியை சேர்ந்த அழகுதுரை என்பவரின் மகள் தேவசேனை(9). அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்க பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று காலை, முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றபோது, தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 17, 2024

கடலூரில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்திலும் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

error: Content is protected !!