Cuddalore

News July 20, 2024

ரௌலட்டட் வகை பானை ஓடுகள் கண்டெடுப்பு

image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 8 குழிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் சூழலில் நேற்று நடைபெற்ற அகழாய்வில் ரெளலட்டட் வகை பாளையங்கோடுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இந்த பானையோடுகள் சங்க காலத்தை சார்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News July 20, 2024

15 நாட்கள் நீதிமன்ற காவல்

image

கடலூர்,காராமணிக்குப்பம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வீட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உடல்கள் தீவைத்து எரிந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை எற்படுத்தியது.குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் சங்கர் ஆனந்த்,சாகுல் அமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News July 20, 2024

மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு – ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட 141 ஆவது ஆட்சியராக பொறுப்பேற்ற சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று நிருபர்களை சந்தித்தார். அதில் அடிப்படை வசதி, கல்வி, சுகாதாரம் போன்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிப்பேன். தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் அனைத்தும் ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு செல்ல அயராது உழைப்பேன் என கூறினார்.

News July 19, 2024

கடலூர் முதுநகர் துறைமுகத்தில் ஒன்றாம் கூண்டு ஏற்றம்

image

வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் புயல் தூர எச்சரிக்கை காரணமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.

News July 19, 2024

கடலூர் மாவட்ட புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய டாக்டர். அருண் தம்புராஜ், தற்போது மாநில சுகாதாரத்துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டு இன்று கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில்குமார் பொறுப்பேற்றார். இதையடுத்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் புதிய ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

News July 19, 2024

மூவர் கொலையில் 2 இளைஞர்கள் கைது

image

நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்த கமலேஸ்வரி (60), இவரது மகன் சுகந்த்குமார் (40), பேரன் நிஷாந்த் (10) ஆகியோர் கடந்த 15 ஆம்  தேதி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில்  காராமணிக்குப்பம் சீத்தாராம் நகரை சேர்ந்த சங்கர் ஆனந்த் (21), ஷாகுல்அமீது (20) போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

News July 19, 2024

44 உதவி ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம்

image

கடலூர் மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, தனிப்பிரிவு மற்றும் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 44 உதவி ஆய்வாளர்கள் கடலூர் மாவட்டத்திற்குள்ளேயே வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு நேற்று(ஜூலை 18) கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பிறப்பித்துள்ளார்.

News July 19, 2024

கடலூர் ஆட்சியருக்கு நினைவு பரிசு வழங்கி வழியனுப்பி வைப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய டாக்டர். அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ், தற்போது மாநில சுகாதாரத்துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் கடலூரைச் சேர்ந்த ரத்த உறவுகள் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் நேற்று (ஜூலை 18) வியாழக்கிழமை டாக்டர் அருண்தம்புராஜை நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

News July 18, 2024

15 ஹான்ஸ் மூட்டைகளை பறிமுதல்

image

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகிலுள்ள மேல் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி மகன் பால்ராஜ். ஆவட்டி குடிக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்தி. இவர்கள் இருவரும் இன்று(ஜூலை 18)ஆட்டோவில் எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 15 ஹான்ஸ் மூட்டைகளை ராமநத்தம் போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!