Cuddalore

News July 25, 2024

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News July 25, 2024

அரசு பள்ளிக்கு மேஜை, நாற்காலி வழங்கிய எம்எல்ஏ

image

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், வேளங்கிப்பட்டு அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் மேஜை மற்றும் நாற்காலிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் இன்று வழங்கினார். பரங்கிப்பேட்டை ஒன்றிய அவை தலைவர் ரங்கசாமி, கூட்டுறவு சங்கத் தலைவர் வசந்த் வள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News July 25, 2024

அகழாய்வில் சோழர் கால பொருள் கண்டெடுப்பு

image

பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் தொல்லியல் துறை சார்பாக நடைபெற்று வரும் அகழாய்வில் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அகழாய்வில் செம்பினால் அரிய அஞ்சனகோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சோழர் காலத்தை சார்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து மருங்கூர் பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

News July 25, 2024

சிறுமியிடம் அத்துமீறல்; தொழிலாளி கைது

image

வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சாமிவேல் (58). நேற்று அந்த பகுதியை சேர்ந்த 8 வயதுடைய சிறுமியை சாமிவேல் தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். பின்னர் அவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய், வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிவேலை கைது செய்தனர்.

News July 25, 2024

கடலூரில் 71 பேரின் வாங்கி கணக்குகள் முடக்கம்

image

கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா கடத்தல், விற்பனை செய்த மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என 71 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக, கடலூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வடக்கு மாவட்ட காவல் துறை தலைவர் அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், கள்ளச்சாராயம், கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்வோர் மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

News July 24, 2024

மெல்போர்னில் கலந்துரையாடிய குறிஞ்சிப்பாடி அமைச்சர்

image

அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றுள்ள குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அட்ரியன் விட்டில் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராட்சியாளர்களுடன் கலந்துரையாடினார்.

News July 24, 2024

கடலூரில் வி.ஏ.ஓ-க்கள் ஆர்ப்பாட்டம்

image

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பண்ருட்டி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொது கலந்தாய்வு முடிந்த பின்பு விதிமுறைகளை மீறி, அரசாணைகளுக்கு எதிராக கடலூர் வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்பட்ட பணியிட மாறுதல்களை உடனடியாக ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News July 24, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

டி.என்.பி.எஸ்.சி.யால் 14.9.2024 அன்று நடத்தப்படும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சிபெறும் வகையில் வேலைவாய்ப்பு துறை மூலம் சிறப்பு பயிற்சி வகுப்பு, உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் சென்னை மயிலாப்பூரில் நடக்கிறது. இதில் சேர மாற்றுத்திறனாளிகள் 29.7.2024க்குள் scdaplacement@gmail.com என்ற மின்னஞ்சலில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 24, 2024

சீர்மரபினர் வீடு கட்ட நிதி உதவி

image

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு ‘சீட்’ திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி ஆகிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள் அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in ” என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News July 24, 2024

மீனவர்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ

image

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தில் வீராணம் ஏரியில் மீன் பிடிக்கக் கூடிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்தவர்களை, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ நேற்று நேரில் சந்தித்து மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

error: Content is protected !!