Cuddalore

News July 26, 2024

கண்காட்சியை பார்வையிட்ட கலெக்டர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் கண்காட்சி அரங்குகள் இன்று அமைக்கப்பட்டிருந்தது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், கண்காட்சியில் இருந்த பொருட்களின் தன்மை மற்றும் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

News July 26, 2024

மீனவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கிய கலெக்டர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு மீன் வியாபாரம் மேற்கொள்வதற்கான குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, மீனவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கினார்.

News July 26, 2024

தங்கம் வெல்ல காத்திருக்கும் இளவேனில் வாலறிவன்

image

தமிழகத்தில் கடலூரில் 1999ம் ஆண்டு பிறந்தவர் இளவேனில் வாலறிவன். இவர் பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர்ரைஃபிள் பிரிவில் இடம்பெற்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில், இம்முறை பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் விளையாடுகிறார். இவர் 2022 ISSF உலக துப்பாக்கி சுடுதலில் சாம்பியன்ஷிப் வெண்கலப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

News July 26, 2024

அமைச்சர் கணேசன் இன்று அறிக்கை வெளியீடு

image

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் விருத்தாச்சலம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற உள்ளது. இதில் திமுக தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News July 26, 2024

தாவரவியல் பூங்காவை பார்வையிட்ட அமைச்சர்

image

அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு வந்துள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் டாஸ்மேனியா மாகாணம், ஹோபார்ட் நகரில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு, அங்கு தாவரங்கள் பராமரிக்கப்படும் தொழில்நுட்ப முறைகள், பூங்கா அமைக்கப்பட்டுள்ள விதங்கள் மற்றும் பராமரிப்பு விதங்களை பார்வையிட்டு விவரங்களை நேற்று கேட்டறிந்தார்.

News July 26, 2024

நாளை திமுக ஆர்ப்பாட்டம்

image

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை 27-ஆம் தேதி கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற உள்ளது. இதில் திமுக தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

News July 26, 2024

பத்திரிகையாளருக்கு சி.பி.எம் பாராட்டு

image

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சமீபத்தில் சிதம்பரம் தினமணி நிருபர் சுந்தர், சபிதா பல்கலைக்கழகத்தின் சார்பில் ‘சிறந்த பத்திரிக்கையாளர்’ விருது பெற்றதை பாராட்டி சுந்தர்ராஜனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் மாவட்ட செயலாளர் மாதவன், நகர செயலாளர் ராஜா மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் இருந்தனர்.

News July 26, 2024

ஒப்பந்தத்தை ரத்து செய்த ஆணையர்

image

கடலூர் மாநகராட்சி, மஞ்சக்குப்பம் பகுதியில் பாதாளசாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை தொழிலாளி ஒருவர் உள்ளே இறங்கி சரிசெய்யும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை கடலூர் மாநகராட்சி ஆணையர் அணு ரத்து செய்து உத்தரவிட்டார்.

News July 26, 2024

கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டம்

image

கடலூர் அருகே தொண்டமாநத்தம் விஏஓ ஜெயராமமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து தொடர் போராட்டத்தில் வி.ஏ.ஓ-க்கள் கடந்த 4 நாட்களாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிக்க உள்ளதாக விஏஓ-க்கள் தெரிவித்து சென்றனர்.

News July 25, 2024

கடலூர் ஆட்சியரிடம் மனு வழங்கிய எம்எல்ஏ

image

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச்செல்வன் இன்று சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது காட்டுமன்னார்குடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து மனு கொடுத்தார். உடன் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

error: Content is protected !!