India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த 35 வயதுக்குட்பட்டவர்கள் 30.9.2024 அன்றைக்குள் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம்-607001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் நடப்பு சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு, இ-சேவை மையம் மூலம் பயிர் காப்பீடு செய்யலாம். இதில் ஒரு ஏக்கர் சம்பா பயிருக்கு ரூ.548, மக்காச்சோளத்திற்கு ரூ.375, பருத்திக்கு ரூ.412, உளுந்திற்கு ரூ.231-ம் வருகிற 15.11.2024-க்குள் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இன்று காலை சிறப்பு குழு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சிறைச்சாலை வளாகத்தில் உள்ள கழிவறை அருகில் ஒரு பட்டன் செல்போன், சிம் கார்டு, 3 பேட்டரிகள் மண்ணில் புதைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் செல்போனை சிறை வளாகத்தில் மண்ணில் புதைத்து வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவிணங்குடி பகுதி மக்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது நாங்கள் 50க்கும் மேற்பட்டோர் எங்கள் பகுதியில் வசித்து வரும் நபரிடம் நாங்கள் அனைவரும் 4 கோடி அளவில் பணம் கொடுத்தோம் அவர் அதற்கு வட்டி தருவதாக கூறினார். ஆனால் கடந்த 2 வருட காலமாக எதுவும் தரவில்லை, அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவில் கூறியிருந்தார்.
தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு சென்னை கிண்டியில் 14.10.2024 அன்று தொடங்க உள்ளது. இதில் 21 முதல் 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் சேர்ந்து பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு 7845358815 மற்றும் 8668107552 என்ற எண்களிலும், https://www.youtube.com/shorts/GBnEEtTOiul, www.editn.in என்ற இணையதளத்தில் காணலாம் என கடலூர் ஆட்சியர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 27-ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் மனுக்கள் பெற உள்ளார். இதில் தங்களது கோரிக்கை குறித்து பேச உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் 600 விவசாயிகள் தேனீ வளர்க்க ரூ.14.40 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நடப்பாண்டில் 300 விவசாயிகள் தேனீ வளர்க்க ரூ.7.20 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேனீ வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பது குறித்த பயிற்சி வழங்கவும் தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி காட்டுமயிலூரில் 67 மில்லி மீட்டரும், வேப்பூர் 45 மில்லி மீட்டர், விருத்தாசலத்தில் 12 மில்லி மீட்டர், பண்ருட்டியில் 9 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடியில் 5 மில்லி மீட்டர், கடலூரில் 4.4 மில்லி மீட்டர், சிதம்பரத்தில் 4.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் திருக்குறள் வினாடி-வினா நிகழ்ச்சி கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் நாளை (23ஆம் தேதி) மதியம் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதனை உலக திருக்குறள் பேரவை கடலூர் மாவட்ட அமைப்பு நடத்த உள்ளது. இதற்கு கல்லூரி முதல்வர் சபீனா பானு தலைமை வகிக்கிறார். உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் ‘உயர்வுக்குப் படி’ வழிகாட்டி நிகழ்ச்சி 23ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கடலூர் செயின்ட் மேரிஸ் மகளிர் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் உயர் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான ஊக்குவித்தல், வங்கிக் கடன் மற்றும் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.