Cuddalore

News July 28, 2024

அதிமுக நிர்வாகி வெட்டி கொலை

image

புதுச்சேரி மாநில எல்லைப்பகுதியான திருப்பனாம்பாக்கம் அருகே கடலூர் நவநீதம் பகுதி அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் (43) மர்ம நபர்களால் இன்று காலை வெட்டி கொல்லப்பட்டார். அதிகாலை கோவில் கலை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது, காரில் வந்த மர்ம நபர்கள் அவரது பைக்கை இடித்து கீழே தள்ளி வெட்டி கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 28, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இங்கு செராமிக் தொழில்நுட்பம் சம்பந்தமான மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகின்றது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT WITH YOUR FRIENDS!

News July 27, 2024

சமுதாய கழிப்பறை கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே ம.பொடையூரில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் சமுதாய கழிப்பறை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்று மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News July 27, 2024

பண்ருட்டி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

image

பண்ருட்டி எம்எல்ஏ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் “போலி” பேராசிரியர்களால் நிரப்பப்பட்டதை, அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை பணிநீக்கம் செய்வதோடு, குற்றவழக்கில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News July 27, 2024

மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அமைச்சர்

image

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்ச்செருவாய், கொரக்கை உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

News July 27, 2024

வீடு கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் புதுக்கூரைப்பேட்டை ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்று மாலை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் மங்களூர் பகுதியில் நடக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News July 27, 2024

அமைச்சர் கணேசன் மற்றும் கலெக்டர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி அமைக்க இடம் தேர்வு செய்வது குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News July 27, 2024

பெண் மீது 42 சாராய வழக்குகள்!

image

கடலூர் வசந்த ராயன் பாளையத்தை சேர்ந்தவர் புனிதா. கடந்த ஜூன் 27-ஆம் தேதி இவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரித்ததில் முதுநகர் காவல் நிலையத்தில் இவர் மீது 42 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தடுப்பு காவலில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

News July 27, 2024

லாரி மோதி ஒருவர் பலி

image

பரங்கிப்பேட்டை அருகே உள்ள C.புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வேலு (55). இவர் தனது இருசக்கர வாகனத்தில் பரங்கிப்பேட்டையிலிருந்து C.புதுப்பேட்டைக்கு நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மீன் ஏற்றி வந்த லாரி மோதியதில் வேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் லாரியும் சாலையின் ஓரம் புரண்டது. போலீசார் உடலை மீட்டு, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

News July 27, 2024

ரூ.52 கோடிக்கு வழங்கப்பட்ட உதவிகள்

image

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மக்கள் 1 லட்சம் பேருக்கு ரூ.52¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதில் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, விலையில்லா தையல் இயந்திரம், பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!