India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (38). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கடலூர் மகளிர் போலீசில் நேற்று (ஏப்ரல் 5) மாலை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசனை நேற்று இரவு கைது செய்தனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலகுறைவால் இன்று உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் வருகை தருவதாக கூறப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு நாளை அவரது இல்லத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார். என்று கூறப்பட்டுள்ளது.
100% வாக்குப்பதிவு வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்பு தேசியக் கொடியை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஏராளமான கலந்துகொண்டு கயிறு தேசிய கொடியை ஏந்தி நாடாளுமன்றத் தேர்தலில் 100%வாக்களிப்பு வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 119 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும்,11 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.மேலும் சிதம்பரம் தொகுதியில் 192 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும்,7 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனை முன்னிட்டு நேற்று இரவு 9.45 மணிக்கு கடலூர், ஜட்ஜ் பங்களா சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்கு வந்தார். அங்குள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் முதல்வர் தங்கினார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி கடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்திற்கு ஆதரவாக கடலூர், மஞ்சக்குப்பம் மீன் அங்காடி மற்றும் கடைத்தெரு பகுதிகளில் பொதுமக்களிடம் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்று துண்டறிக்கை வழங்கி வாக்கு சேகரித்தனர்.
கடலூர் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர் கடலூர் மாவட்டத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு காரில் வந்த போது தேர்தல் பறக்கும் படை குழுவினர் விஷ்ணு பிரசாத் காரை சோதனை செய்தனர். இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல்15ஆம் முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளது. அதனால் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீனவர்கள் 61 நாட்களுக்கும் கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம். இதை மீறி மீன்பிடித்தால் சம்பந்தப்பட்ட மீனவர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர், 100% வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சார்பில் மனித சங்கிலி நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாநகராட்சி ஆணையர் உட்பட பலர் பங்கேற்று மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.