India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் புனித வளனார் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அபிநயா பார்வையிட்டார். அருகில் தாசில்தார் பலராமன் உள்ளார். இப்பயிற்சி வகுப்பு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது, வாக்கு சீட்டை சரி பார்ப்பது போன்ற ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.
கடலூர் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் கட்ட பயிற்சி பெறும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று (07.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலூர் புனித வளனார் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரியும் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிக்கும் என மொத்தம் 9 தொகுதிக்கு தபால் வாக்கு பதிவு இன்று நடைபெற்றது. இதில் தேர்தலில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் தங்கர்பச்சான், கடலூர் சட்டமன்ற தொகுதி சிங்கிரிகுடி பகுதியில் இன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி, விளையாடி மகிழ்ந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உடன் பாமக கடலூர் மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் மற்றும் பாமக நிர்வாகிகள் இருந்தனர்.
கடலூரில் இன்று வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் பேருந்து நிறுத்தம் அருகே ‘மஞ்சக்குப்பம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை’ சார்பில் பொது மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கப்பட்டது. இதனை அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி குடித்ததுடன் நீர் மோர் வழங்கிய மனவளக்கலை அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் அருகே களத்தூரில் இருசக்கர வாகனம் மீது கர்நாடக பதிவெண் கொண்ட சொகுசு கார் மோதியதில் ராஜதுரை(29). நான்கு மாத கர்ப்பிணி பெண் மதுமதி(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் உயிர்தப்பிய 2 வயது குழந்தை புகழ், படுகாயங்களுடன் வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஏப்ரல்.7) கடலூருக்கு வருகிறார். பின்னர் அவர், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு முரசு சின்னத்தில் ஆதரவு கேட்டு மாலை 4 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். பின்னர் நெல்லிக்குப்பம், பண்ருட்டிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. இந்த பாதுகாப்பு அறையை நேற்று மாலை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.