India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வடலூர் சீயோன் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் ஈட்டி தலையில் பாய்ந்து மூளைச்சாவு அடைந்த மாணவன் கிஷோர்(15) நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில், குறிஞ்சிப்பாடி தாசில்தார் அசோகன், நெய்வேலி டி.எஸ்.பி. சபிபுல்லா ஆகியோர் நேற்று மாணவனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று மாலை 5 மணி அளவில் மாணவனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து மனு அளித்தார். அதில் விருதாச்சலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத், தேஜாஸ் மற்றும் ஹம்சபார் விரைவு ரயில்கள் நின்று செல்லவும், விழுப்புரம்- தாம்பரம் பயணிகள் ரயிலை விருதாச்சலம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

பொதுமக்கள் தங்கள் செல்போன்களுக்கு வரும் எஸ் எம்ஸ்களை கிளிக் செய்தால் உங்களது Whatsapp, Social Media கணக்குகள் சைபர் குற்ற வாளிகளால் ஹேக் செய்யப்பட்டு, பொய்யான தகவலை நீங்கள் அனுப்புவது போல உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி பண இழப்பை ஏற்படுத்தலாம். அதனால் Bank Reward Points APK பயன்பாட்டு இணைப்புகளை Click செய்யாமல், கவனமாக இருக்க வேண்டும் என கடலூர் எஸ்.பி.ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் 38 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 37 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாத்தா, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி உதவி ஆய்வாளர் பூவராகவன், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 24ஆம் தேதி ஈட்டி எறிதல் பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக மாணவர் கிஷோர் தலையில் ஈட்டி பாய்ந்தது. இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவர் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் குடுபத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தர்மபுரியை சேர்ந்த ஸ்ரீதர் இன்று தனது குடும்பத்துடன் சேத்தியாத்தோப்பு வந்து விட்டு, விருத்தாசலம் அடுத்த கார்குடல் வழியாக தர்மபுரி நோக்கி சென்ற போது, முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய போது அங்கு நின்ற பசுமாடு மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஸ்ரீதர் மற்றும் காரில் வந்த 11 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேட்டூர் அணையில் விநாடிக்கு 125000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க செல்லக் கூடாது, கால்நடைகளை மேய்ச்சலில் விடக் கூடாது மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொது மக்கள், மாற்று இடத்துக்கு செல்ல வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று சிங்கப்பூர் மெரினா நீர் தேக்கத்தை ஒட்டி, 260 ஏக்கரில் அமைந்துள்ள, “தி கார்டன்ஸ் பை தி பே” பூங்காவில் உள்ள மூன்று நீர்முனை தோட்டங்களை பார்வையிட்டார். தொடர்ந்து உலகின் மிகப்பெரிய கண்ணாடி பசுமை இல்லத்தையும் பார்வையிட்டார்.

வடலூரில் செயல்பட்டு வரும் எஸ்டி சியான் பள்ளியில், கடந்த 24-ம் தேதி ஈட்டி எறிதல் பயிற்சியின்போது, பத்தாம் வகுப்பு மாணவர் கிஷோர் தலையில் ஈட்டி பாய்ந்தது. இதனால் மூளைச்சாவடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் மாணவனின் கண்கள் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.