India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று, கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 37 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு, 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு, 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இரவு 7 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமப் பகுதிகளில், வெள்ள அபாய தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா தலைமை வகித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில், வெள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத அட்டை தாரர்கள், இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம். ஜூன் மாதம் து.பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள 7,74,895 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெறாதவர்கள் இம்மாதம் பெறலாம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துளார். கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர், நெய்வேலி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை மேற்கொள்ள கால அவகாசம் வரும் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத், இன்று (ஆகஸ்ட் 3) காலை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்தார். அப்போது அவர், நெய்வேலியில் உள்ள விமான நிலையத்தை UDAN திட்டத்தின் கீழ் விரைவில் மேம்படுத்தி பொதுமக்களுக்கான விமான சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.

தமிழகத்தின் சிவகங்கை, புதுக்கோட்டை, ராம்நாடு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW!

கடலூர் காராமணிக்குப்பத்தில்சிறுவன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜுலை 15-ஆம் தேதி தாய் கமலேஸ்வரி, மகன் சுகந்தகுமார், பேரன் இஷான் ஆகியோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஆனந்த சங்கர், சாகுல் ஹமீது என இருவர் கைதான நிலையில், கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்த பகீம் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து அதிகப்படியான உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டப்பட்டிணம் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.