India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை கடலூர், சிதம்பரம் என 2 லோக்சபா தொகுதிகள் உள்ளது.கடலூர் தொகுதியில் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சிதம்பரம் தொகுதியில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, அரியலூர் மாவட்டம், அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம் என 6 தொகுதிகள் உள்ளன
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று கடலூர் மஞ்சக்குப்பம், பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் பணி நடந்தது. அதேபோல் துணை தாசில்தார் ஜெயக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர், கடலூர் மஞ்சக்குப்பம் ரவுண்டானா அருகே வாகன சோதனை நடத்தினர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 17ம் தேதி இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் இளவழகி , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்யராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை பொதுத் தோ்தல் நடைபெற இருப்பதால் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் தோ்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்ததால் நாளை 18 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
கடலூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தெருமின் விளக்குகள் பராமரிப்பு பணி இன்று நடைபெற்றது. கடலூர் மாநகராட்சி 22-வது வார்டு சொரக்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தெருமின் விளக்குகளில் பராமரிப்பு பணி, இன்று 22-வது வார்டு மாமன்ற சுபாஷினி ராஜா தலைமையில் நடைபெற்றது.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தங்கராஜ் தலைமை தாங்கினார்.இதில் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து கலெக்டர் விளக்கி பேசினார்.இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாவட்டம் வருவாய் அலுவலர் ராஜசேகரன் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கடலூர் மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூருக்கு வரும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்து, வாகனத்தில் பணம், பரிசுப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று சோதனை செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கு சென்று கருத்து கேட்கப்படும். அதன் அடிப்படையில் எழுத்துப்பூர்வமாக வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்குப்பதிவு செலுத்த முடியாது, எனக் கூறும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், அரசு கட்டிடங்களில் எந்த வகையான அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் செய்யக்கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் தேர்தல் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Sorry, no posts matched your criteria.