Cuddalore

News November 16, 2024

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ-வுக்கு 2 ஆண்டு சிறை

image

காட்டுமன்னார்குடி அடுத்த மேல்பருத்திக்குடி கிராம நிர்வாக அலுவலரான வீராசாமி (65) கடந்த 2012-ம் ஆண்டு தானே புயலில் பாதிக்கப்பட்ட அதேபகுதியை சேர்ந்த ஆசைதம்பி என்பவருக்கு புயல் நிவாரண தொகை வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் லஞ்சம் வாங்கிய வீராசாமிக்கு இன்று கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் சிறப்பு நீதிபதி நாகராஜன், 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

News November 16, 2024

கடலூரில் நீரில் மூழ்கிய தரைப்பாலம் 

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள தரைப்பாலம் கடலூர் மற்றும் பாண்டிச்சேரியை இணைக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வரத்து வருவதால் தரை பாலம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தில் பயணம் செய்து வருகின்றனர்.

News November 16, 2024

மகளை கடத்திய பெற்றோர் மீது வழக்கு

image

புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவர் அதே பகுதியை சேர்ந்த அனிதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்,  நேற்று புதுச்சத்திரம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த அருளை அனிதாவின் தந்தை சக்திவேல், தாய் ராஜகுமாரி மற்றும் உறவினர்கள் அருணை தாக்கிவிட்டு மகள் அனிதாவை கடத்தி சென்றனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

News November 16, 2024

கடலூர் மாவட்டத்திற்கு உதயநிதி வருகை!

image

கடலூர் மாவட்டத்திற்கு வரும் 24.11.2024 மற்றும் 25.11.2024 ஆகிய நாட் களில் ஆய்வு கூட்டம் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வர உள்ளார். இதனை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 15, 2024

கடலூரில் நாளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்

image

01-01-2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவைகளை மேற்கொள்ள நாளை (16.11.2024) மற்றும் 17.11.2024 (ஞாயிறு), 23.11.2024 (சனி) மற்றும் 24.11.2024 (ஞாயிறு) ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News November 15, 2024

கலெக்ட்ரேட்டில் 56.8 மி.மீ மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.,15) காலை நிலவரப்படி, கலெக்ட்ரேட்டில் 56.8 மில்லி மீட்டர், கடலூர் 44.8 மி.மீ, லால்பேட்டை 9 மி.மீ, தொழுதூர் 9 மி.மீ, குப்பநத்தம் 8.4 மி.மீ, மே.மாத்தூர் 7 மி.மீ, லக்கூர் 5.4 மி.மீ மற்றும் கீழ்ச்செருவாயில் 3.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News November 15, 2024

கடலூர் மாவட்ட மக்களுக்கு நற்செய்தி

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார் பிறந்து 15 ஆண்டுகள் ஆன குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெறாதவர்கள் தற்போது அரசு அறிவித்திருக்கும் பிறப்பு இறப்பு விதிகளை திருத்தி 1-1-2020 முதல் டிச.31ஆம் தேதி வரை 5 ஆண்டுகள் பதிந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. வரும் டிச. 31ஆம் தேதி கடைசி நாளாகும். இதை பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தியுள்ளது. 

News November 15, 2024

கடலூர் மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்

image

குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, கேப்பர் மலை, கொர்ணாபட்டு, தொழுதூர், தோப்புக்கொல்லை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (16/11/2024) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை, குண்டியமல்லூர், சேரகுப்பம், கொல்லக்குடி, ஆர்என் புரம் உள்ளிட்ட பிற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

சிதம்பரம் கோவில் விவகாரம் உயர்நீதிமன்றம் உத்தரவு

image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும். சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம் அமைக்கப்படும். பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு வேறொரு அமர்வில் விசாரணையில் உள்ளது. தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது. இந்து அறநிலையத் துறையின் வாதத்தை மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News November 14, 2024

குழந்தைகளே எதிர்த்து நில்லுங்கள் – கலெக்டர்

image

கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து மடலில், “குழந்தைகளாகிய உங்களிடம் பாலியல் ரீதியாக எவரேனும் தவறாக செயல்பட முயற்சித்தால் எதிர்த்து நில், உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடு, உடனடியாக உனக்கு நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மற்றும் சைல்ட் ஹெல்ப்லைன் 1098 என்ற எண்ணில் உதவி கேள்” என்று தெரிவித்துள்ளார்.