India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருத்தாசலம் நீதிமன்ற வளாகம் எதிரில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குரங்குகள் அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடி செல்வதோடு சாலையில் செல்லும் பொதுமக்களை சில நேரங்களில் கடிக்க பாய்கின்றன.எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த தொரவளூர் பகுதியில் எஸ்.பி. தனிப்படை போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அதில் 26 குடங்களில் 250 லிட்டர் பனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து மோகன் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் ஆறுமுக நாவலர் இறகுபந்து விளையாட்டுக் குழும அங்கத்தினர் சார்பில் முதியோர், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு நேற்று (ஏப்,14) 70 மாணவ, மாணவிகள், முதியோர்களுக்கும் காலை சிற்றுண்டி மற்றும் அவர்களுக்கான துண்டு, காலணி, பிஸ்கெட், பழங்கள், குளியல் சோப், பல் துலக்கும் பிரஷ், வேட்டி,சட்டை, புடவை, டீ சர்ட் உள்பட மொத்தம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் வழங்கப்பட்டன.
கடலூர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கடலூர் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, ஆலயமணி, பழ. தாமரைக்கண்ணன், வழக்கறிஞர் தமிழரசன்,
பி.ஆர்.வெங்கடேசன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கல்பனா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் சீனுவாசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் வரும் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாளை (16/04/2024) இரவு 7 மணிக்கு கடலூர், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் அக்கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நாளை முதல் 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள். இதனால் மீன்களின் வரத்து குறையும் என்பதால் வஞ்சிரம், கடம்பா போன்ற மீன்களின் விலை கணிசமாக உயரலாம் என மீனவர்கள் கூறியுள்ளனர்.
சிதம்பரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கிள்ளையை சேர்ந்த 21 வயது வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் தற்போது அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதைப் பற்றி தகவல் அறிந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பூவழகி தலைமையில் நேற்று விசாரணை நடத்தி வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூரில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி தேர்தல் முடியும் வரை பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடலூர் பெட்ரோல் பங்குகளில் போலீஸார் சார்பில் இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 100% வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடக்கிவைத்தார். உடன் கடலூர் எஸ்.பி, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.