Cuddalore

News May 17, 2024

கடலூர் அருகே மனைவி மீது கொடூர தாக்குதல்

image

பண்ருட்டி அடுத்த சொரத்தங்குழியை சேர்ந்தவர் குணசேகரன் (34). இவரது மனைவி கமலா(28). குணசேகரனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை கமலா கண்டித்ததால் ஆத்திரமடைந்த குணசேகரன் நேற்று இரும்பு கம்பியால் அவரது தலையில் அடித்தார். இதில் காயமடைந்த கமலா பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News May 17, 2024

கடலூரில் கணவன் மனைவியை கொன்ற சம்பவம்  

image

கடலூர் துறைமுகம் சோனாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ்.இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.ஊருக்கு வந்த நிலையில் தனது இரண்டாவது மனைவி சூர்யாவுக்கு வேறொருவருடன் தொடர்பு உள்ளதாக சந்தேகம் அடைந்த ரமேஷ் இன்று காலை சூர்யாவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். தகவலறிந்த கடலூர் துறைமுகம் காவல்துறையினர் சூரியாவின் உடலை கைப்பற்றி தப்பியோடிய ரமேஷை வலை வீசி தேடி வருகின்றனர்.

News May 17, 2024

கடலூர் மழைப்பொழிவு விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் கலெக்டர் அலுவலகம் பகுதியில் 5 செ.மீட்டரும், வேப்பூர், லால்பேட்டை, பெலாந்துறை ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும், சிதம்பரம், காட்டுமயிலூர், சேத்தியாதோப்பு, தொழுதூர், கீழச்செருவாய் ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.

News May 17, 2024

கடலூரில் மிதமான மழை…!

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் உட்பட 9 பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 17, 2024

கடலூர்: நீச்சல் பயிற்சி வரும் 26ஆம் தேதி நிறைவு

image

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கியது. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் இந்த நீச்சல் வகுப்பு வரும் 26ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

ஐ.டி.ஐ.யில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

காட்டுமன்னார்கோயில், மங்களூர், சிதம்பரம், கடலூர் மற்றும் நெய்வேலியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக ஜூன் மாதம் 7-ம் தேதி வரை மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என இன்று கடலூர் அரசு ஐ.டி.ஐ. முதல்வர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

கடலூர்:நீர் மோர் பந்தலை போலீசார் அகற்றினர்

image

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சி கே எஸ் கார்த்திகேயன் தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்த நிலையில் இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறி போலீசார் அந்த பந்தலை அகற்றினர். இத்தகவல் அறிந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் அந்த இடத்தில் ஒன்று திரண்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

News May 16, 2024

கடலூர் மழைக்கு வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

நெஞ்சுவலியால் நடத்துனர் மரணம்

image

புதுச்சேரியில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பேருந்து கடலூர் வந்தபோது நடத்துனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேருந்து ஓட்டுநர் கோபால் பேருந்தை கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்குள் பயணிகளுடன் ஓட்டிச் சென்றார். அங்கு நடத்துனருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

News May 16, 2024

கடலூரில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

image

கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் வெயிலில் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கடலூரில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் வெயிலால் கடலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது.

error: Content is protected !!