India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (27/05/24) மணிலா வரத்து 0.12 மூட்டை, உளுந்து வரத்து 3 மூட்டை, நெல் (91) வரத்து 156.48 முட்டை, நெல் (சின்ன பொன்னி) வரத்து 20 மூட்டை, நெல் (வெள்ளை பொன்னி) வரத்து 9.47 மூட்டை வரத்து வந்துள்ளது. இது மட்டுமில்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.
கடலூரில் அமைந்துள்ள தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது. 6ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த இக்கோயில் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர அரசுகள் என பலரால் கட்டப்பட்டது. இந்த குறிப்புகள் இக்கோயிலில் கண்டறியப்பட்ட 50 கல்வெட்டுகளிடமிருந்து பெறப்பட்டவை. இவ்விறைவன் மீது வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவை என்ற நூலை இயற்றியுள்ளார். மணவாள மாமுனிகளாலும் இத்தலம் பாடல்பெற்றுள்ளது.
கடலூர் மாநகர போக்குவரத்து போலீசார் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவர், அதிவேகமாக வாகனம் ஓட்டிய ஒருவர், இருசக்கர வாகனத்தில் 3 பேராக அமர்ந்து சென்ற 21 பேர் உள்ளிட்ட 112 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்தனர்.
குறிஞ்சிப்பாடி வட்டம் விருப்பாட்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன். ஸ்ரீ அங்கமுத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (26/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் விநாயகம், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்வதற்கு இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. படகு சவாரி செய்வதற்கான டோக்கன் கொடுப்பதை பகல் ஒரு மணியோடு நிறுத்தி விட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் நிலை உள்ளது. வரும் வழியிலேயே சுங்க சாவடியில் கூட்டம் அதிகமாக இருப்பதால் திரும்பி செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.
சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழல் கட்டி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற விழாவுக்கு, கட்சியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ராஜா. சம்பத்குமார் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் ஜெ.மஞ்சுளா வரவேற்றார்.
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் (2ஆம் எண்) புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. முன்னதாக கடலூர் துறைமுகத்தில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடலூரிலிருந்து பண்ருட்டி பறை டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்பொழுது வரக்கால்பட்டு பகுதியில் சென்றபோது டிப்பர் லாரியின் முன் சக்கரம் பஞ்சரானதால் லாரி தாறுமாறாக சாலையில் ஓடியது.அப்பொழுது டிரைவர் லாரியை நிறுத்த முற்பட்டார்.ஆனால் லாரி அங்கிருந்த டீக்கடை நோக்கி வந்தது.அப்பொழுது டிரைவர் சாமர்த்தியமாக லாரியை டீக்கடை முன்பு நிறுத்தினார்.
கடலூரில் அமைந்துள்ளது புனித டேவிட்கோட்டை, இந்த கோட்டை சோழ மண்டல கடற்கரையோரமாக அமைந்துள்ளது. செஞ்சி மன்னர்களால் கட்டப்பட்ட சிறிய கோட்டையாயிருந்த இது 1677இல் செஞ்சிக் கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் மராட்டியரின் கைக்கு வந்தது. மராத்தியர்களிடமிருந்து பிரித்தானியரால் 1690ஆம் ஆண்டு இந்தக் கோட்டையும் மற்றும் சுற்றிலும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களும் மொத்தமாக வாங்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.