India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் நாடாளுமன்ற தேர்தல் 4 சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை.கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 101379 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.அவரை அதிர்ந்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 69650 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
31729 வாக்குக்கள் வித்தியாசத்தில் -காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் இன்று காலை 10.40 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் – 1,06,263 வாக்குகளும்,
தே.மு.தி.க வேட்பாளர் சிவக்கொழுந்து – 67,819 வாக்குகளும்,பா. ம. க வேட்பாளர் தங்கர் பச்சான் – 31,511 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகன் 13,582 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முடிவடைந்த நிலையில், 2ம் சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சி – 38820, தேமுதிக – 27286, பாமக -14520, நாதக – 5129 இதுவரை பெற்றுள்ளது. இதில், 11534 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார்
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 25,228, தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 19,653, பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 11195, நாம் தமிழர் கட்சி மணிவாசகம் 3151 வாக்குகள் பெற்றுள்ளனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி 5575 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது
சிதம்பரம் மக்களவை தொகுதியில் திருமாவளவன் முன்னிலை பெற்றுள்ளார்.தற்போது திருமாவளவன் 4000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று திருமாவளவன் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 4717, தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 2567, பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 1961, நாம் தமிழர் கட்சி மணிவாசகம் 527 வாக்குகள் இதுவரை பெற்றுள்ளனர்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கடலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கடலூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்க உள்ளது. இந்த நிலையில் கடலூர் தொகுதியில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டு எண்ணும் அறையிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு மேஜையிலும் 1 மேற்பார்வையாளர், 2 உதவியாளர்கள் மற்றும் 1 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 56 அலுவலர்கள் பணியில் ஈடுபடுவர் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கடலூரில் லோக்சபா தேர்தல் (ஏப்.19) முடிந்து வாக்குப்பெட்டிகள் கடலூர், தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 8.30 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கப்படும். தொடர்ந்து கடலூர் மற்றும் நெய்வேலி தலா 17, விருத்தாசலம் 21, பண்ருட்டி 19, திட்டக்குடி 18 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்தில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் மேற்பார்வையில் சீல் அகற்றப்பட்டது.மேலும் கடலூர் நாடாளுமன்ற வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் காலையிலிருந்து கூட்டமாக செல்கின்றனர்
Sorry, no posts matched your criteria.