India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 15) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரைக்காடு ஊராட்சி, கண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அன்னவள்ளி மற்றும் இராமாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெறும் மக்களுடன் முதல்வர் – ஊரகம் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் இன்று (ஜூலை 15) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கர்மவீரர் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மஞ்சகுப்பம் பகுதியில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு கடலூர் எம்பி விஷ்ணு பிரசாத் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் திலகர், வழக்கறிஞர் சந்திரசேகர், மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி வேலுச்சாமி மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு திமுக சார்பில் மாநகர செயலாளர் ராஜா, கடலூர் மாநகர் மேயர் சுந்தரி ராஜாஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாமன்ற உறுப்பினர் சுபாஷ்ணி ராஜா, பாலசுந்தர் மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
பெண்ணாடம் அடுத்த தாழநல்லூரைச் சேர்ந்தவர் பாரதிதாசன். திட்டக்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம்- சித்தலூர் புறவழிச் சாலையில் சென்ற போது, அங்கு நின்ற ஒரு மாட்டின் மீது மோதி கீழே விழுந்தார். அப்போது கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பஸ் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலூர் உட்பட 21 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு எற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கடலூரில் இரவு நேரத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஐடி ஊழியர் சுதன்குமார். இவரது வீட்டில் இருந்து இன்று காலை புகை வருவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சோதனையிட்டதில் வீடு முழுவதும் ரத்தம் தெரித்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர் மாவட்டம் பரவலூர் – கோமங்கலம் பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் பிரதீப்ராஜா(22), மணிமாறன்(18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை வேடிக்கை பார்க்க அப்பகுதியில் கூட்டம் கூடியது.அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் 17 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் விருத்தாச்சலம் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர், உச்சிமேடு, நாணமேடு, சுப உப்பலவாடியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கடலூர் – புதுவை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவு வைரலானதையடுத்து அப்பகுதியில் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 14) பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது. கடலூரில் 34 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 35 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.