India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி ஜன.5ஆம் தேதி காலை 7 மணிக்கு கடலூரில் நடக்கிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பெயர்களை 4.01.2025 க்குள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

அனுமன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பரங்கிப்பேட்டை சஞ்சீவி ராயர் கோவில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை மரவாடி கோ. ஜெய்சங்கர் செய்திருந்தார் இதில் கவுன்சிலர் மரவாடி கோ. அருள்முருகன் முன்னிலை வகித்தார் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயக்குமார் நியமனம் செய்ப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் கடலூர் எஸ்.பி-யாக இருந்த ராஜாராம் தஞ்சை மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷேர் செய்யவும்!

பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கரும்பு, மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில் கொள்முதல் செய்யப்படும் என்றும், கரும்பின் உயரம் மற்றும் தரம் ஆகியவற்றை சோதித்து பொதுமக்களுக்கு தரமான கரும்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அருகே மனைப்பட்டா வழங்க கோரி, கிராம மக்கள் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். சிதம்பரம் அடுத்துள்ள பெரியப்பட்டு ஊராட்சி தலைவர் அர்சுணன் தலைமையில், ஜெயசங்கர், பாவாடை, ராதாகிருஷ்ணன், குப்புசாமி, ராஜசேகர், காமராஜ், சந்திரசேகர், கண்ணன், ரமேஷ், தேவதாஸ் உள்பட 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணியிடம் மனு அளித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், 14 பேரூராட்சிகள், 6 நகராட்சிகளில் இன்று கூட்டுதூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் கடலூர் மாநகராட்சி பகுதியிலிருந்து 149 தூய்மை பணியாளர்கள், 335 தனியார் துறை சார்ந்த பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறை இப்பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் சில்வர் பீச் கடற்கரை சாலையில் நாளை (டிசம்பர் 29) காலை 7 மணிக்கு கோலப்போட்டி நடைபெற உள்ளது. இந்த கோலப்போட்டி ஒரு மணி நேரம் நடைபெறும். இதில் புள்ளி கோலம், டிசைன் கோலம், ரங்கோலி கோலம் ஆகிய கோலங்கள் மட்டுமே போட வேண்டும். இந்தப் போட்டியில் பங்கேற்க ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மட்டுமே தங்களது ஏதாவது ஒரு அடையாள சான்றுடன் கலந்து கொள்ளலாம்.

கடலூர் அருகே உள்ள குமராபுரத்தை சேர்ந்தவர் பாரதிராஜா (43) எலக்ட்ரீசியன். மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்கின்ற இவர், கடலூரில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாரதிராஜாவை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கொடுவா மீன்வளர்ப்பு பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ரேவு மெயின் ரோடு, கடல்வாழ் உயிரியல் அண்ணாமைலை பல்கலைகழகம் எதிரில், பரங்கிப்பேட்டை-608502 என்ற முகவரியில் 10.01.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவரது மறைவையொட்டி இன்று நடக்க இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இன்று (27.12.2024) நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.