India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி, தற்போது மாநில சுகாதாரத்துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள அருண்தம்புராஜை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா இன்று நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரபலங்கள் பலர் ஆட்சியர் அருண் தம்புராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து பணி மாறுதலில் செல்லும் அருண் தம்புராஜை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
திட்டக்குடி அடுத்த வடகராம்பூண்டியை சேர்ந்த அழகுதுரை என்பவரின் மகள் தேவசேனை(9). அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்க பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று காலை, முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றபோது, தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்திலும் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்பு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளது. அதனால் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், எண்.113, கலெக்டர் அலுவலகம் என்ற முகவரியில் நேரடியாக அல்லது தபால் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தி.மு.க அரசு 3வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், நியாய விலை கடைகளில் வழங்கி வரும் பருப்பு, பாமாயில் நிறுத்த முயற்சிப்பதை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜூலை 23ம் தேதி விருத்தாச்சலம் அம்மா உணவகம் அருகில் நடைபெற உள்ளது. இதில் அதிமுகவினர் கலந்து கொள்ளுமாறு புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான சி வி கணேசன் இஸ்லாமியர்களுக்கு மொஹரம் பண்டிகை வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் மொஹரம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெறவுள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்கள் ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவசமாக ஆன்மிக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலாவுக்கு செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயதுடையவர்கள் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தலைமையில் வேளாண்மை துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.