India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளான சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். அவர்களுக்கு தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா பானை சின்னம் இன்று ஒதுக்கீடு செய்தார்.
கடலூர் முதுநகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது அவர் கூறியதாவது மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார் அதுமட்டுமின்றி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் மிகவும் எளிமையான மனிதர் அதனால் இவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கூறினார்.
கடலூருக்கு இன்று மாலை அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி வருவதை அடுத்து கடலூர் அண்ணா மேம்பாலம் தொடங்கி மைதானம் வரை அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன.இதற்கு முறையான அனுமதி வாங்கவில்லை என மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் கடலூர் பகுதியில் இருந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சி கொடி கம்பங்கள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
இன்று சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் தடா பெரியசாமி.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த தடா பெரியசாமி, தற்போது சிதம்பரம் தொகுதிக்கு சீட் கேட்டு கொடுக்காததால் அதிமுகவில் இணைந்தார் என கூறப்படுகிறது.பாஜகவில் பட்டியல் அணி மாநிலத் தலைவராக இருந்தார் தடா பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளி சார்பில் சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு நடந்தது. இங்கு 40 சிறைவாசிகள் கற்போராக பயின்று வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் மூலம் எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 40 சிறைவாசிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து சிறைவாசிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு,அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு ஆதரவாக இன்று மாலை 6 மணிக்கு கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
கடலூர் கம்மியம்பேட்டை பழைய குப்பை கிடங்கு அருகே உள்ள கெடிலம் ஆற்றில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் இன்று அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடலூர் பகுதியில் இன்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்துள்ளனர். சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. மேலும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பதநீர் வாங்கி குடித்தனர். இதனால் பதநீர் விற்பனை படுஜோராக நடந்தது. இதில் 200 மில்லி பதநீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும். அந்த வகையில் கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயம் திருச்சபையில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பஸ் பயண சலுகையின் செல்லத்தக்க காலம் 31.3.2024 ஆகும். இந்நிலையில் சலுகை காலம் முடிவடைய உள்ளதாலும், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும் 2023-24-ல் வழங்கப்பட்ட அதே பஸ் பயண அட்டையை 30.6.2024 வரை மாற்றுத்திறனாளிகள் தங்கு தடையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என கடலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.