Cuddalore

News April 9, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் சுபிக்க்ஷா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

image

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கட்டடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.வடலூர் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் அங்கு போலீஸ் குவிப்பு.

News April 8, 2024

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நேற்று நெய்வேலி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்க்கு நெய்வேலி பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். உடன் அமைச்சர் கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.

News April 8, 2024

கடலூர்:விசிக டிஜிட்டல் முறையில் பிரச்சாரம்

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த ஒரு வாரமாக மக்களைச் சந்தித்து திமுகவினருடன் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, டிஜிட்டல் முறையிலும் விசிகவை அதிகளவில் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, கியூஆர் குறியீடு மூலம் அந்தக் கட்சி சார்பில் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

News April 7, 2024

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

image

கடலூர் புனித வளனார் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அபிநயா பார்வையிட்டார். அருகில் தாசில்தார் பலராமன் உள்ளார். இப்பயிற்சி வகுப்பு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது, வாக்கு சீட்டை சரி பார்ப்பது போன்ற ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. 

News April 7, 2024

2-ஆம் கட்ட பயிற்சி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

image

கடலூர் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் கட்ட பயிற்சி பெறும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று (07.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 7, 2024

கடலூர் மாவட்டத்திற்கு மழையா?

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 7, 2024

தபால் வாக்கு செலுத்திய அரசு ஊழியர்கள் 

image

கடலூர் புனித வளனார் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரியும் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிக்கும் என மொத்தம் 9 தொகுதிக்கு தபால் வாக்கு பதிவு இன்று நடைபெற்றது. இதில் தேர்தலில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர்.

News April 7, 2024

கடலூர் அருகே மகிழ்ந்த வேட்பாளர்

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் தங்கர்பச்சான், கடலூர் சட்டமன்ற தொகுதி சிங்கிரிகுடி பகுதியில் இன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி, விளையாடி மகிழ்ந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உடன் பாமக கடலூர் மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் மற்றும் பாமக நிர்வாகிகள் இருந்தனர்.

News April 7, 2024

கடலூரில் இன்று இலவச நீர் மோர் வழங்குதல்

image

கடலூரில் இன்று வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் பேருந்து நிறுத்தம் அருகே ‘மஞ்சக்குப்பம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை’ சார்பில் பொது மக்களுக்கு இலவச நீர் மோர்  வழங்கப்பட்டது. இதனை அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி குடித்ததுடன் நீர் மோர் வழங்கிய மனவளக்கலை அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தனர்.