India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் எந்நேரத்திலும் உபரி நீரானது திறந்து விடப்படும். அதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் அதனைச் சார்ந்த தாழ்வான கிராம பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட சார் ஆட்சியர்/வட்டாட்சியரின் உரிய அறிவுரைக்குப்பின் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.
வடலூர் தனியார் பள்ளி ஒன்றில் மாணவன் கிஷோர் தலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கையில், பள்ளியின் கணித ஆசிரியர் பிரவீன் குமார் அன்றைய தினம் விளையாட்டு பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் பிரவீன் குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனை, கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால் பொதுமக்கள், காவல்துறை மதுவிலக்கு பிரிவு கைபேசி எண்ணில் (7418846100) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு பேனர்கள், கடலூர், குண்டு சாலை உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டுள்ளன.
வடலூரில் ஈட்டி தலையில் பாய்ந்து மாணவன் கிஷோர் உயிரிழந்ததற்கு, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதாவது: அன்பு மகனை இழந்து தவிக்கும் கிஷோரின் பெற்றோர்களுக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரை சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி செல்லக்கிளி(37). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செல்லக்கிளியை மர்மநபர் இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த அவர், தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து செல்லக்கிளியை கொலை செய்தது யார்? என்று விசாரித்து வருகின்றனர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ்களை வழங்கினார்.
2024-2025-ம் கல்வியாண்டில் கடலூர் மாவட்டத்தில் 1708 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் 56,362 மாணவர்கள் மற்றும் 56,109 மாணவிகள் என மொத்தம் 1,12,471 மாணவர்களுக்கு மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில், கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்ற வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள தொழில் முனைவோர் மைய வளாகத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள செயற்கை நுண்ணறிவு மையத்தினை பார்வையிட்டவர் , அதன் அதிகாரிகளோடு கலந்துரையாடினார்.
வடலூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில், பார்வதிபுரத்தை சேர்ந்த திருமுருகன் மகன் கிஷோர் (15). 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த கடந்த 24ஆம் தேதி பள்ளியில் நடந்த விளையாட்டு பயிற்சியின் போது, சக மாணவர் எறிந்த ஈட்டி அவரது தலையில் பாய்ந்ததில் படுகாயமடைந்த கிஷோர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மூளைச்சாவு அடைந்தார்.
Sorry, no posts matched your criteria.