India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா திருத்தம் செய்வதற்கு, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் திருமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த நேரு என்பவரிடம் ரூ.15,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில் லஞ்சம் தர விரும்பாத அவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

காடாம்புலியூரை அடுத்த காட்டாண்டிக்குப்பத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சக்தி நாதன் (22). தனியார் கல்லூரியில் படித்து வந்து இவர் நேற்று பண்ருட்டி அருகே விழாமங்கலத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், சக்திநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (டிச.5) இரவு 10 மணி முதல் இன்று(டிச.6) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று டிச.5 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி ஶ்ரீ முஷ்ணம் 7.3 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 6 மில்லி மீட்டர், தொழுதூர் 5 மில்லி மீட்டர், விருத்தாசலம் 4.2 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில், குப்பநத்தம் தலா 3 மில்லி மீட்டர், லால்பேட்டை 2 மில்லி மீட்டர், வானமாதேவி 1.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கடலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, Diploma
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 5) காலை 8.30 மணி நிலவரப்படி பெலாந்துறை 37.8 மில்லி மீட்டர், வேப்பூர் 13.5 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 11.2 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 10 மில்லி மீட்டர், லக்கூர் 9.1 மில்லி மீட்டர், பண்ருட்டி 9 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 126.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் இதுவரை நடந்த கணக்கெடுப்பில் இறப்பு, முகவரி மாற்றம், இரட்டைப் பதிவு, ஊரில் வசிக்காமை போன்ற காரணங்களுக்காக 2,62,650 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் வரும் 11-ம் தேதி வரை அவகாசம் இருப்பதால் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் ஒரு முறை சரிபார்க்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.