Coimbatore

News November 11, 2024

கோவை: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்

image

திமுக செய்தித் தொடர்பு துணைச்செயலாளர் கோவை செல்வராஜ் ex எம்எல்ஏ மறைவையொட்டி லாலி சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ. ரவி, மாவட்ட துணைச்செயலாளர்கள் கோட்டை அப்பாஸ் ஜெயந்தி, தலைமைச்செயற்குழு உறுப்பினர் சோமு (எ) சந்தோஷ் இருந்தனர்.

News November 10, 2024

சிறப்பு நிதி ரூ.200 கோடி ஒதுக்கீடு

image

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மண் சாலைகளை, தார் ரோடாக மாற்றுவதற்கு சிறப்பு நிதியாக ரூ.200 கோடி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு நிதி பெறுவதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும். மோசமாக உள்ள மண் சாலைகள், கவுன்சிலர்கள் கூறும் இடங்களில் உள்ள சாலைகளை கள ஆய்வு செய்து, புகைப்படங்களுடன் ரோட்டை தேர்வு செய்து சமர்ப்பிக்க, உதவி பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 10, 2024

அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது

image

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக, நக்கீரன் இதழை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கிரிமினல் குற்ற நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News November 10, 2024

கோவை மூன்று நாட்களுக்கு மழை இல்லை

image

கோவை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை, பெரிய அளவில் மழை இருக்காது. வரும் 13ஆம் தேதி, பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கில் அதிகபட்சமாக 4.9 மி.மீ., மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். அதே நாளில், கிணத்துக்கடவு 4.1, , சுல்தான்பேட்டை 3.6, காரமடை 2.8, அன்னூர் 2.1, தொண்டாமுத்தூரில் 2.1 மி.மீ., மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என கோவை வேளாண் பருவநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

News November 10, 2024

கோவையில் இன்றைய நிகழ்ச்சிகள்

image

➤பேரூர், திருவாவடுதுறை ஆதினக் கிளை மடம் சார்பில் ராஜராஜ சோழனின் 1039ஆவது சதய விழா இன்று நடக்கிறது. ➤கோவைப்புதூர் சங்கரா கிருபா மையத்தில் இன்று மாலை கர்நாடிக் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ➤காந்திபுரம் கிராஸ்கட் ரோடு மாநகராட்சி பள்ளியில் “நம்ம ஊரு சந்தை” இன்று நடக்கிறது. ➤பேரூர் படித்துறையில் இன்று காலை 7 மணி முதல் 9.30 மணி வரை களப்பணி நடக்கிறது.

News November 9, 2024

கோவை:  இதுவரை 62 பேர் மீது குண்டாஸ்

image

கோவை எஸ்பி கார்த்திகேயன் இன்று மாலை விடுத்த செய்தி குறிப்பில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் இதுவரை 62 பேர் மீது குண்டூர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 9, 2024

கோவை மாவட்ட அளவிலான அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி

image

கோவை மாவட்ட அளவிலான அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி – கோவை பெக்ஸ், 12.11.2024 மற்றும் 13.11.2024 ஆகிய தேதிகளில் சுகுணா திருமண மண்டபம், அவினாசி ரோடு, பீளமேடு,நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள அஞ்சல் தலைகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News November 9, 2024

கோவையில் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது

image

திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த தங்கராஜ் (61) கோவை டாடாபாத் 8வது வீதியில் கோகுலம் பேலன்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் குறைந்த விலையில் தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி ரூபாய்.70 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். பின் கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் மக்கள் அளித்த புகாரின் பேரில் இன்று கைது செய்து, அவரது சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News November 9, 2024

கோவை மின் நுகர்வோர் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்

image

தமிழக முழுவதும் மண்டல வாரியாக தமிழக மின்சார வாரியம்புகார்  தெரிவிக்க வாட்ஸ் அப் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்ட மின் நுகர்வோர் புகார் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணெய் தொடர்பு கொள்ளலாம் என்று செய்து குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9442111912 இந்த whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

News November 9, 2024

‘அமரன்படம்: தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்’

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (நவம்பர் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ‘அமரன்’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.