Coimbatore

News November 14, 2024

கோவையில் இலவச டபுள் டக்கர் பேருந்து

image

கோவை மாவட்டத்தில், கோயம்புத்தூர் விழா நவம்பர் 23 முதல் டிசம்பர் 1, 2024 வரை நடைபெற உள்ளது. விழாவின் ஒரு பகுதியாக, இரண்டு டபுள் டக்கர் பேருந்தில் கோவை நகரை பொதுமக்கள் இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயணத்திற்கான டிக்கெட்டுகளை www.coimbatorevizha.theticket9.com-ல் பதிவு செய்து கொள்ளலாம்; முன்பதிவிற்கு 7010708031 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

News November 14, 2024

கோவை மாவட்டத்தில் தென்பட்ட சிறுத்தை

image

கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் இன்று மலையில் உள்ள ஒரு பாறையின் மீது சிறுத்தை ஒன்று இன்று இருந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் இருந்து சிறிது தூரத்திலேயே உள்ள மலையில் சிறுத்தை தென்பட்டுள்ளதால் ஊருக்குள் வருவதற்கு முன்பு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 14, 2024

கோவைக்கு சிறப்பு பேருந்து

image

பௌர்ணமி, அம்மாவாசை மற்றும் வார விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. அதன்படி கோயமுத்தூர் மாவட்டம் உட்பட 12 மாவட்டங்களுக்கு சேர்த்து வெள்ளிக்கிழமை அன்று 460 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆகவே மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

பணிக்கு வராத மருத்துவர்களால் பாதிப்பு

image

சென்னையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய சம்பத்தின் எதிரொலியாக, இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து துறைகளிலும் மருத்துவர்கள் பலர் பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 14, 2024

கடன் உதவி திட்டத்தில் கடன் பெற அழைப்பு

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் 7% வட்டியில் 20 லட்சம் வரை குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. கோவையை சேர்ந்த ஆர்வமுள்ள நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். விவரங்களுக்கு மாவட்ட தொழில்மையத்தின் பொதுமேலாளரை தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

News November 14, 2024

மார்ட்டினுக்கு சொந்தமான இடத்தில் ED சோதனை

image

கோவை துடியலூரில் உள்ள தொழிலதிபர் மார்ட்டின் வீடு (ம) மார்ட்டின் குழும அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இரு கார்களில் வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News November 14, 2024

கோவையில் வேலைவாய்ப்பு முகாம்

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 10, 12, டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும். விபரங்களுக்கு 0422- 2642388 என்ற எண்ணை அழைக்கலாம்.

News November 14, 2024

இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற பேராசிரியர் கைது

image

வடவள்ளி பகுதியில் இளம் பெண்ணை, பேராசிரியர் சிவபிரகாசம், என்பவர் கற்பழிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று இளம் பெண் இது குறித்து ஆர்.எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பேராசிரியர் சிவபிரகாசத்தை கைது செய்த காவல்துறையினர் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 13, 2024

தொலைந்து போன 252 மொபைல் போன்கள் நாளை ஒப்படைப்பு.

image

கோவை எஸ்பி அலுவலகம் இன்று விடுத்த செய்தி குறிப்பில் நாளை(நவ.14) காலை 11 மணியளவில் கோவை எஸ்பி கார்த்திகேயன் புறநகர் பகுதிகளில் தொலைந்து போன ரூ.48,36,500 மதிப்பிலான 252 மொபைல் போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 13, 2024

2023-24ம் ஆண்டின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் அறிவிப்பு

image

கோவை, தொண்டாமுத்தூர் கல்வீரம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி தமிழக அரசின் 2023 – 24 ஆம் ஆண்டுக்கான சிறந்த அரசு பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிக்கு நாளை (14.11.2024) காலை 8.00 மணியளவில் சென்னை-04, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில்  பள்ளிக் கல்வி துறை அமைச்சர் சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் மற்றும் பரிசுகள் வழங்க உள்ளார்.