Coimbatore

News March 4, 2025

பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம் – 336 மாணவர்கள் பங்கேற்கவில்லை

image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்.3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் மொழிப்பாட தோ்வை 34,958 போ் எழுதினா். 336 மாணவ, மாணவிகள் தோ்வில் பங்கேற்கவில்லை. அதேபோல் தனித்தோ்வர்களில் 34 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தமிழ் பாட தோ்வு எளிதாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய வகையில் வினாத்தாள் அமைந்திருந்ததாகவும் மாணவா்கள் கூறினா்.

News March 4, 2025

IOB வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) 750 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகையாக ரூ.15,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 4, 2025

கோவை விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு 

image

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்க, தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகின்றன. வரும், 31ம் தேதிக்குள் விவசாயிகள் தங்களது ஆதார் எண், பட்டா விபரம் ஆகியவற்றுடன் சென்று அந்தந்த ஊர்களில் நடக்கும் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம் (அ) அருகில் உள்ள அரசு பொது இ-சேவை மையத்திலும் கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம் என கோவை வேளாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

பியூட்டி பார்லரில் விபச்சாரம் – புரோக்கர் கைது

image

கோவை சேரன் மாநகர் அடுத்த பாலாஜி நகரில் உள்ள ஒரு காம்பளக்ஸில் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்ததை உறுதி செய்தனர். இதனையடுத்து அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த 43 வயது பெண் புரோக்கரை கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.

News March 4, 2025

கலெக்டர் அதிரடி நடவடிக்கை 

image

கோவை கலெக்டர் பவன் குமார் இன்று சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளி பொதுத்தேர்வு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர் நெல்லித்துறை ஊராட்சிக்கு கடம்பன் கோம்பை மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை தோளில் தூக்கி சென்ற சம்பவம் குறித்து கோட்டாச்சியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் 2, 3 மாதங்களில் அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும் என்றார்.

News March 4, 2025

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாவர்கள் விபரம்

image

கோவை மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வில் மொத்த 35,294 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் இன்று 34,958 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும், 336 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதேபோல மொத்தம் 649 மாணவர்கள் தனித்தேர்வர்கள் எழுதினார்கள். அதில் இன்று 615 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். இதில் 34 தேர்வு எழுதவில்லை என என கோவை மாவட்ட பள்ளிகல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News March 3, 2025

வாகனம் கவிழ்ந்து விபத்து: தந்தை, மகன் பலி

image

சிறுமுகை, கூத்தாமண்டி பிரிவை சேர்ந்த கார்த்திக் பாபு தனது மகன் சாய் மித்திரனுடன் சென்னம்பாளையத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து உறவினரின் பிக்கப் வாகனத்தை எடுத்துக்கொண்டு மகன் மற்றும் நண்பர் குகனுடன் சென்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தந்தை, மகன் பலியாகினர். படுகாயமடைந்த குகன் கோவை கோவை ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 3, 2025

கோவைக்கு 300 புதிய பஸ்கள் விரைவில் வருகை

image

கோவைக்கு தாழ்தள பஸ்கள், டவுன் பஸ்கள், மப்சல் பஸ்கள் என புதிதாக 300 பஸ்கள் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. இதில் 170 டவுன் பஸ், 64 தாழ்தள பஸ்கள் அடங்கும். மேலும், கடந்த ஒரு ஆண்டில் அரசு பஸ்களின் பாடிகள் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி 226 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 150 மப்சல் பஸ்கள், 32 டவுன் பஸ்கள், 44 மலைப்பகுதி பஸ்கள் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 3, 2025

வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள்

image

வெள்ளியங்கிரி மலை மற்றும் மலை அடிவாரத்தில் இருக்கும் சிவன் கோயில்கள் சுமார் 3000 ஆண்டு பழமையான கோயில்களாக கருதப்படுகின்றன. இங்கு இருக்கும் சிவபெருமான் “வெள்ளியங்கிரி ஆண்டவர்” என்னும் அம்பாள் “மனோன்மணி” என அழைக்கப்படுகிறது. தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத தளமாக விளங்குகிறது.

News March 3, 2025

கோவை: அதிமுக-பாஜக கூட்டணி அமைகிறதா?

image

தமிழக எதிர்க்கட்சி சட்டமன்றக் கொறடாவும், அஇஅதிமுக தலைமை நிலையச் செயலாளரும், தொண்டாமுத்தூர் எம்எல்ஏவுமான SP.வேலுமணி இல்லத்தில் நடைபெற்ற அவரது மகன் V.விஜய் விகாஸ், மணமகள் செல்வி C.T. தீக்ஷனா ஆகியோரின் திருமண விழாவில், இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

error: Content is protected !!