India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் +1 பொதுத்தேர்வு இன்று துவங்கி வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் +1 பொது தேர்வை மொத்தம் 127 மையங்களில் 363 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 36,664 மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வின் போது முறைகேடுகளை தடுக்கும் வகையில் 300 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. தேர்வு மையங்களில் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை இன்று நடமாடியதைத் தொடர்ந்து உடனடியாக, மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றப்பட்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது யாரையும் அனுமதிக்கவில்லை. பல்கலைக்கழகம் பின்புள்ள புதிய கட்டிடப் பகுதியில் தற்போது வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதனை கல்லூரியின் முதல்வர் எழிலி துவக்கி வைத்தார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கோவையைச் சேர்ந்த அரசு, தனியார் கல்லூரிகள் என 26 கல்லூரிகள் பங்கேற்றன. 4,250 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 2,291 மாணவ, மாணவிகள் முகாமில் பங்கேற்றனர். 43 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் நிறுவனங்களுக்கு மாணவர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தன.
கோனியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு இன்று (மார்ச்.5) கோயிலை சுற்றி உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை என கோவை கலெக்டர் பவன்குமார் கிரியப்பானவர் அறிவித்தார். 11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு (05.03.2025) காலை வழக்கம்போல் நடைபெறும் என்றும் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (04.03.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசார் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மாநகரில் டி.எஸ்.பி. பொன்னுசாமி, மற்றும் பி.என்.பாளையம், பேரூர், ககசாவடி, கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி மேற்கு, ஆழியார், சிறுமுகை, மேட்டுப்பாளையம் போலீசாரின் பெயரும் தொலைபேசி எண்ணும் பகிரப்பட்டுள்ளது. மேலும் அவசர எண் 100 ஐ தொடர்பு கொள்ளலாம்.
கோவையில் கோணியம்மன் தேரோட்டம் காரணமாக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேரூரிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள், செல்வபுரம், பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்லலாம். வைசியாள் வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள், உக்கடம், பேரூர் பைபாஸ் ரோடு, சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் ரோட்டை அடையலாம். மருதமலை ரோடு, தடாகம் ரோட்டில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது.
கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், ராஜ வீதியில் தேரை தயார்படுத்தும் இறுதி கட்ட பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சாலை ஓரங்களில் இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டப்படுகின்றன. ஆங்காங்கே பொதுமக்கள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், காவல்துறையினரும் தீவிர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய மற்றும் புதுப்பிப்பதற்காக பொதுமக்கள் தினந்தோறும் பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க அதற்கான டோக்கன்கள் தினமும் காலை 8 மணிக்கு வழங்கப்படும் எனவும், டோக்கன் பெற விரும்பும் நபர்கள் தங்களது ஆதார் அட்டையுடன் நேரில் வந்து டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
கோனியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 05 அன்று கோயிலை சுற்றி உள்ள பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்தார். 11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை (05.03.2025) காலை வழக்கம்போல் நடைபெறும் என்றும் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார். அதில், “எனக்கும், கோவை டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரருக்கும் திருமணம் நடந்தது. கணவர் மது போதையில் தாய் வீட்டிற்கு சென்று பணம், நகை வாங்கி வர கூறி என்னை கிரிக்கெட் பேட்டால் அடித்தார்.என் கணவரும், அவர் தாயும் என்னை உடல், மன ரீதியாக துன்புறுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.