India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் வழக்கறிஞர் காா்வேந்தன் எழுதிய ‘கொங்கு ரத்தினங்கள்’, ‘கொங்கு மாமணிகள்’ நூல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. கொங்கு நூலை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், தனியார் நிறுவனங்களின் செயல் இயக்குநா் ராஜ்குமாா் பெற்றுக்கொண்டாா். இதில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு காரணம் ஆன்மிகம் என்றார்.
கோவை பீளமேட்டில் செயல்படும் தனியார் பள்ளியில் 21 குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்வித்துறை (ம) சுகாதாரத்துறை அறிவுரைப்படி பள்ளிக்கு மார்ச்.8 முதல் 12ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க குழந்தைகளுக்கு யாருக்கேனும் பொன்னுக்கு வீக்கி பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவர்கள் ஆலோசனை பெறவும். (SHARE பண்ணுங்க)
கோவை மாவட்டத்தில் இன்று (07.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழன் தொலைக்காட்சி மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தும் மகளிர் தின சிறப்பு பட்டிமன்ற நிகழ்விற்காக கோவைக்கு இன்று வருகை புரிந்த திரைப்பட இயக்குநரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜனை கோவை விமான நிலையத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் உறுப்பினர் வெங்கடகிருஷ்ணன் பொன்னாடை போற்றி வரவேற்றார். அறக்கட்டளையின் நிறுவனர் எஸ்.ஏ.ஐ.நெல்சன் அவர்கள் உடன் இருந்தார்.
கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் இன்று கூறியுள்ளதாவது: மார்ச் 11ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை கொங்கு மண்டலத்தில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை கண்டிப்பாக பரவலாக இருக்க வாய்ப்பே இல்லை. அனைத்து பகுதிகளிலும் மேகமூட்டத்தை எதிர்பார்க்கலாம், மழை ஆங்காங்கே மட்டுமே தான் இருக்கும். தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றார்.
மேட்டுப்பாளையம் வட்டாட்சியரகம், வட்ட வழங்கல் அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை,பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம்,அரிசி கார்டாக மாற்றம் தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி மக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலையறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 15,000+ காலி பணியிடங்கள் நிரப்பவுள்ளன. 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், 0422-2642388, 94990-55937 என்ற எண்ணை அழைக்கவும். வேலை வாய்ப்புகளை தேடும் நபர்களுக்கு Share பண்ணுங்க.
தலைமை செயலகத்தில் கொங்குநாடு மக்கள் கட்சி பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையை பிரித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொள்ளாச்சி தனி மாவட்டமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறினார். நீண்ட நாள்களாக கோரிக்கையாக இருக்கும் பொள்ளாச்சி, தனிமாவட்டம் ஆகுமா? கோவை மக்களே உங்க கருத்து என்ன? (Share it)
மேட்டுப்பாளையம் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன், சேகர். அண்ணன் தம்பியான இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனிடையே நேற்று மதுபோதையில் சரவணன் சேகரை தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த சேகர் இன்று சரவணனை கத்தியால் குத்தி தப்பி சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சரவணன் கோவை ஜிஹெச்சில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சேகரை கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி எண்ணிக்கையை அதிகரிக்க ஆபரேட்டர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். ஹெச்டி டிஜிட்டல் ‘செட்ஆப் பாக்ஸ்’ இலவசமாக கொடுக்க வேண்டும் என ஆபரேட்டர்கள் கேட்டு வருகின்றனர். இலவசமாக கொடுக்க முடியாது. 500 பணம் செலுத்திதான் பெற வேண்டும். ஆபரேட்டர்களின் நிதி பிரச்னையை கருத்தில் கொண்டு, ஹெச்.டி. டிஜிட்டல் செட்ஆப் பாக்ஸ் வாங்க வங்கி மூலம் கடன் ஏற்பாடு செய்து தரப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.