Coimbatore

News March 29, 2025

கோவை மாநகராட்சி வரி வசூலில் சாதனை

image

2024-2025 நிதியாண்டில் ரூ.462.21 கோடி சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கோவை மாநகராட்சி ரூ.464.71 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இலக்கை தாண்டி வரி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மண்டலம் வாரியாக வரி வசூல்: வடக்கு – 92.12% கிழக்கு- 91.30% மேற்கு- 90.88% மத்தியம்- 89.79% தெற்கு- 87.25% மொத்த வரி வசூல் – 90.45% என வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

News March 29, 2025

கோவை மக்களே இன்று இக்கோவிலுக்கு போங்க

image

கோவையில் முக்கியமான கோவில்களில் மாசாணி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உள்ள முக்கியமான பிற சன்னதிகள் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன் போன்றவை ஆகும். மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்கிற நம்பிக்கை. கோவை மக்களே இன்று(மார்ச்.29) அமாவாசையை முன்னிட்டு இங்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அம்மன் அருள் பெற SHARE பண்ணுங்க.

News March 28, 2025

கோவை எஸ்.பி அறிவுறுத்தல்!

image

கோவை எஸ்.பி. கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில், இணையதளத்தில் பணத்தை இழந்துவிட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது சைபர் கிரைம் புகார்களுக்கு ஆன்லைன் மூலமாக www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார். SHARE IT!

News March 28, 2025

கோவையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு 

image

கோவை மாவட்டத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 19,509 மாணவர்களும்,19,925 மாணவிகள் என மொத்தம் 39,434 பேர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். அதேபோல் தனித் தேர்வுகள் 1,211 மாணவர்கள் எழுதுகின்றனர். மாவட்டத்தில் 518 பள்ளிகளில் 158 தேர்வு மையங்களில் இந்த பொதுத் தேர்வானது நடைபெறுகிறது. 220 பறக்கும் படையினர் மாணவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 28, 2025

ஓய்வூதியர் குறைகளைவுக் கூட்டம்

image

கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஓய்வூதியர் குறைகளைவுக் கூட்டம் அரசு செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பவன்குமார், கருவூலத்துறை மண்டல இணை இயக்குநர் பாலமுருகன், மாவட்ட கருவூல அலுவலர் குமரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நிறைமதி, என பலரும் கலந்து கொண்டனர்.

News March 28, 2025

வேளாண்மை பல்கலையில் வேலை

image

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் (Walk-IN) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு நேர்காணல் ஏப்.3ஆம் தேதி நடைபெறவுள்ளது. சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.58,000 வழக்கப்படும். மேலும், விவரங்களுக்கு <>இங்கு கிளிக் செய்யவும்<<>>. இதை SHARE பண்ணுங்க.

News March 28, 2025

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: ஒடிசா இளைஞர் கைது

image

கோவில்பாளையத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவில்பாளையம் அண்ணா நகர் பகுதியில், பொன்னுத்தாய்(65) என்ற மூதாட்டிக்கு, அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் மாலிக்(23) என்பவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

News March 28, 2025

கோவை மக்களுக்கு எச்சரிக்கை

image

கோவை மக்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ▶ காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். ▶ வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். ▶ தேநீர், காபி மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். கோவை மக்களே இதை உங்க உறவினர்களுக்கு Share பண்ணுங்க.

News March 27, 2025

கோவையில் தரிசிக்க வேண்டிய சிவன் கோயில்கள்!

image

வெள்ளியிங்கிரி ஆண்டவர் கோயில் – பூண்டி. பட்டீஸ்வரர் கோயில் – பேரூர். மன்னீஸ்வரர் கோயில் – அன்னூர். வில்லீஸ்வரர் கோயில் – இடிகரை, நஞ்சுண்டேஸ்வரர் கோயில் – காரமடை. சங்கமேஸ்வரர் கோயில் – கோட்டைமேடு. அம்மணீஸ்வரர் கோயில் – மெட்டுவாவி. அழுக்குசாமி கோயில் – வேட்டைக்காரன்புதூர். நீலகண்டேஸ்வரர் கோயில் – ஒண்டிப்புதூர். பரமசிவன் கோயில் – இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News March 27, 2025

கோவையில் நாளை 10ஆம் வகுப்பு தேர்வு

image

நாளை (மார்ச்.28) தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வை கோவை மாவட்டத்தில் 157 மையங்களில் 39,433 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் ஹால் டிக்கெட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!