Coimbatore

News March 11, 2025

கோயில் தேரோட்டம்: போக்குவரத்து மாற்றம்

image

காரமடை ரங்கநாதர்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை (மார்ச்.12) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து செல்லும் வாகனங்கள் குட்டையூர், காந்தி நகர், தொட்டிபாளையம், ஒன்னிபாளையம், மத்தம்பாளையம் வழியாக கோவை செல்லலாம். கோவையிலிருந்து வரும் வாகனங்கள் மத்தம்பாளையம், ஏழு சுழி, திம்மம்பாளையம், எம்கே புதூர், டீச்சர்ஸ் காலனி வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம்.

News March 11, 2025

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் ஆய்வில்: மத்திய அரசு

image

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் தமிழ்நாடு அரசிடம் இருந்து 2024 டிசம்பரில் வந்தன என்றும், தமிழ்நாடு அரசின் இந்த திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன என்று மாநிலங்களவையில் மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்துள்ளார். இன்னும் பரிசீலனையிலேயே உள்ளதால் ரயில் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

News March 11, 2025

“வாட்ஸ் அப்” குழு மூலம் மோசடி! உஷார் மக்களே

image

myv3, GBY பாணியில் மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவ்வகையில், கோவையில் “வாட்ஸ் அப்” குழுவில் லாட்டரி குலுக்கல் பரிசு என கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார், கண்ணன், ராஜசேகரனை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். அதிக சம்பாதிக்கலாம் என ஆசைபட்டு, மோசடி வலையில் சிக்கிக் கொள்கின்றனர். உங்க உறவினர்கள் உஷாராக இருக்க Share பண்ணுங்க.

News March 10, 2025

மீண்டும் பேருந்து ஓட்டுனராக களமிறக்கப்பட்ட ஷர்மிளா 

image

சர்மிளா என்னும் பெண் பேருந்து ஓட்டுநர் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு உக்கடம் – சூலூர் பேருந்து இயக்கி வந்தார், பின்பு பேருந்து நிறுவனத்திற்கும் அவருக்கு மேற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்தப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பொள்ளாச்சி ந. மூ. சுங்கத்தில் இருந்து உடுமலைப்பேட்டை வரை இயக்கப்படும் தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணியில் சேர்ந்துள்ளார்.

News March 10, 2025

நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (மார்ச்.11) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என இன்று கோவை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2025

கோவை ரயில்வே பயணிகள் கவனத்திற்கு

image

கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிக்கையில்
கோயம்புத்தூர் ஜங்ஷன் – தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் 11.03.2025 அன்று காலை 07.50 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்ஷனில் இருந்து புறப்படவிருந்த ரயில், இணைப்பு ரயில் தாமதமாக இயக்கப்பட்டதால், 11.03.2025 அன்று மாலை 16.15 மணிக்கு (08 மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக) கோவை ஜங்ஷனில் இருந்து புறப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

News March 10, 2025

கோவையில் காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்

image

கோவையில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <>இங்கு கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கவும். ஊதியம் ரூ.20,000. விண்ணப்பிக்க கடைசி நாள் 11.3.25 ஆகும்.

News March 10, 2025

கோயம்புத்தூரில் மின்தடை! 

image

கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை (11.3.2025) பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், கோவையில் நாளை (11.3.2025) பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருவதால்,  மின்தடை செய்ய கூடாது என உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

News March 9, 2025

மிகப்பெரிய ராட்டினம் கோவையில் அமைக்க திட்டம்

image

இந்தியாவின் மிகப்பெரிய ராட்டினம் டெல்லியில் உள்ளது. அதே போல மும்பையில் ஒரு பிரம்மாண்ட ராட்டினத்தை அமைக்க மும்பை மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் ஆரம்ப நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ராட்டினத்தை கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்து வரும் செம்மொழி பூங்காவில் நிறுவ கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News March 9, 2025

கோவை கலெக்டர் முக்கிய அறிவிப்பு 

image

கோவை கலெக்டர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவத் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற விரும்பும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) இலவச ஆங்கில மொழிப் பயிற்சி அளிக்க உள்ளது. இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!