India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி (06.01.2026 மற்றும் 07.01.2026) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் நெல்லி பானங்கள் – பழரச பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோவை மாவட்டத்தில் இன்று (03.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சென்னையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக பணியாற்றிய கண்ணன் கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பீளமேடு காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர், அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் சிறுநீர் கழிக்க இன்று காலை தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். அப்போது திடீரென கால்வாய்க்குள் விழுந்து அவர் உயிரிழந்தார். பீளமேடு போலீசார் நேரில் ஆய்வு செய்தபோது அவர் மரணமடைந்தது தெரியவந்தது. தற்போது போலீசார் உயிரிழந்தவர் குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனர்.

கோவை மக்களே, இந்திய தொலைபேசி தொழில்கள் நிறுவனத்தில், இளம் நிபுணர்கள் பதவிக்கான 215 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்படும் இப்பதவிக்கு டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி வரும் (06.01.2026) அன்று நடைபெற உள்ளது. இதில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம் தேனீக்கு உணவு தரும் பயிர்கள், தேனைப் பிரித்தெடுத்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கோவை மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <

பெங்களூரு ரயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக சில விரைவு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 3 அன்று திருவனந்தபுரம்–பெங்களூரு விரைவு ரயில் பையப்பனஹள்ளி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் எர்ணாகுளம்–பெங்களூரு மற்றும் பெங்களூரு–எர்ணாகுளம் ரயில்களின் இயக்க நேரம் மற்றும் தொடக்க நிலையம் மாற்றப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை மற்றும் எட்டிமடை பகுதிகளில் நேற்று இரவு மர்ம விலங்கு மோதியதில், இப்பகுதியைச் சேர்ந்த சிவசாமி என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உலா வரும் விலங்கு சிறுத்தையா அல்லது வேறு ஏதேனும் விலங்கா என்பதைக் கண்டறிய தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.