India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இண்டிகோ விமான நிறுவனம் எதிர்வரும் அக்.27ஆம் தேதி முதல் கோவை-சிங்கப்பூர் இடையே இண்டிகோ விமான சேவையை தொடங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 8:15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் விமானம், அதிகாலை 3:15 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 6382955291, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.
கோவை அவிநாசி சாலையில் பிரபலமான தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு இன்று திடீரென இணையதளம் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பள்ளி வளாகத்தில் அனைவரும் ஒருவித பீதியுடன் காணப்பட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து பந்தயசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கலெக்டர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தீபாவளி வரும் அக்.31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளை தவிா்த்து) தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விருப்பம் உள்ளவா்கள் கோவை டிஆர்ஓ – விடம் உரிமம் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை கலெக்டர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தீபாவளி வரும் அக்.31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளை தவிா்த்து) தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விருப்பம் உள்ளவா்கள் கோவை டிஆர்ஓ – விடம் உரிமம் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் கடந்த அக்.4ஆம் தேதி தொடங்கிய மாநில போட்டிகள் வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பதக்கப்பட்டியலில் கோவை மாவட்டம் 1 தங்கம், 2 வெள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. திருச்சி, தேனி இரண்டு, மூன்றாம் இடங்களில் உள்ளன.
அக்.11 ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை சிங்காநல்லூர், காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து மதுரை, திருச்சி, தென்காசி, திண்டுக்கல், தேனி, நெல்லை, நாகர்கோவில், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 140 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பினை ஆணையர் வெளியிட்டுள்ளார். அதன்படி 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழில் தங்களது பெயர்களை பதிவு செய்ய 31.12.2024 தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் பிறப்புச் சான்றிதழ் பெயர் பதிவு செய்ய இயலாது. ஆதலால் மாநகராட்சி பிரதான அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பித்து பெயர் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் வரும் 31.10.2024 அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் www.tnesevai.tn.gov.in என்ற இனையதளத்தில் பதிவேற்றம் செய்து பதிவு செய்ததற்கான நகல் பெறவேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று தெரிவித்துள்ளார்
கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் பெறப்படும் பில்லூர் மூன்றாம் திட்டத்தில் உள்கட்டமைப்புகளில் 09.10.2024 அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 09.10.2024 மற்றும் 10.10.2024 ஆகிய தினங்களில் குடிநீர் விநியோகம் தடை ஏற்படும். இதன் காரணமாக துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, காளப்பட்டி, விளாங்குறிச்சி, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும் என்றனர்.
Sorry, no posts matched your criteria.