India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்று நீர் இன்று (29-03-2025) மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளித்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதி மக்களுக்கு இந்த தண்ணீரே குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த அதிகாரிகள் தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்று ஆய்வு நடத்தினர்.
கோவை மாநகரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை வெளியேற்ற 25 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 110 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீறி வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். உத்தரவை மீறி உயர் நீதிமன்றத்தில் 2 தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அடுத்த கட்டமாக மேலும் 25 பேர் கண்டறியப்பட்டு மாநகரை விட்டு வெளியேற்ற உத்தரவு.
கோடை காலம் முன்னரே கோவை மாவட்டத்தில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். (Share பண்ணுங்க)
2024-2025 நிதியாண்டில் ரூ.462.21 கோடி சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கோவை மாநகராட்சி ரூ.464.71 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இலக்கை தாண்டி வரி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மண்டலம் வாரியாக வரி வசூல்: வடக்கு – 92.12% கிழக்கு- 91.30% மேற்கு- 90.88% மத்தியம்- 89.79% தெற்கு- 87.25% மொத்த வரி வசூல் – 90.45% என வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கோவையில் முக்கியமான கோவில்களில் மாசாணி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உள்ள முக்கியமான பிற சன்னதிகள் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன் போன்றவை ஆகும். மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்கிற நம்பிக்கை. கோவை மக்களே இன்று(மார்ச்.29) அமாவாசையை முன்னிட்டு இங்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அம்மன் அருள் பெற SHARE பண்ணுங்க.
கோவை எஸ்.பி. கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில், இணையதளத்தில் பணத்தை இழந்துவிட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது சைபர் கிரைம் புகார்களுக்கு ஆன்லைன் மூலமாக www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார். SHARE IT!
கோவை மாவட்டத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 19,509 மாணவர்களும்,19,925 மாணவிகள் என மொத்தம் 39,434 பேர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். அதேபோல் தனித் தேர்வுகள் 1,211 மாணவர்கள் எழுதுகின்றனர். மாவட்டத்தில் 518 பள்ளிகளில் 158 தேர்வு மையங்களில் இந்த பொதுத் தேர்வானது நடைபெறுகிறது. 220 பறக்கும் படையினர் மாணவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஓய்வூதியர் குறைகளைவுக் கூட்டம் அரசு செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பவன்குமார், கருவூலத்துறை மண்டல இணை இயக்குநர் பாலமுருகன், மாவட்ட கருவூல அலுவலர் குமரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நிறைமதி, என பலரும் கலந்து கொண்டனர்.
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் (Walk-IN) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு நேர்காணல் ஏப்.3ஆம் தேதி நடைபெறவுள்ளது. சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.58,000 வழக்கப்படும். மேலும், விவரங்களுக்கு <
கோவில்பாளையத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவில்பாளையம் அண்ணா நகர் பகுதியில், பொன்னுத்தாய்(65) என்ற மூதாட்டிக்கு, அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் மாலிக்(23) என்பவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.