Coimbatore

News October 21, 2024

கோவையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

image

கோவை மாநகராட்சி நிர்வாகம் இன்று (அக்.21) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்த நிலையில் நாளை (22.10.2024) செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மேயர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கன மழையின் காரணமாக நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

News October 21, 2024

கோவை: போனஸ்… தூய்மை பணியாளர்கள் போராட்டம்

image

கோவை பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று, தூய்மைப் பணியாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு சதர்ன் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிர்வாகம் போனசாக ரூ 4,500/- வழங்க இருப்பதாக அறிவித்தது. இதை ஏற்க மறுத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News October 21, 2024

கோவை அருகே காட்டாற்று வெள்ளம்: குளிக்க தடை

image

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை காரணமாக பொள்ளாச்சி அருகே ஆழியாறு கவியருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் தடுப்பு வேலிகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2024

காவல்துறையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி

image

பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதான வளாகத்தில் உள்ள நினைவுத்தூண் முன்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் துப்பாக்கி குண்டுகள் முழங்க இன்று அஞ்சலி செலுத்தினர். இதில் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

News October 21, 2024

கோவை: கோவிலில் 20 ஜோடிகளுக்கு திருமணம்

image

தமிழக அரசு சார்பாக ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது வழக்கம். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் சார்பில் திருமண விழா கோவை உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் 20 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி கலந்து கொண்டனர்.

News October 21, 2024

கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

image

தீபாவளி பண்டிகை வரும் அக்.31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. புத்தாடைகள், நகைகள் வாங்க கோவை கடை வீதிகளில் மக்கள் கூட்டம் கடந்த சில நாள்களாக அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் கோவை டவுன்ஹாலில் ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, ராஜவீதி, காந்திபுரத்தில் கிராஸ்கட் வீதி, 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

News October 21, 2024

கோவை விவசாயிகளே ரூ.1 லட்சம்: உடனே விண்ணப்பிங்க!

image

இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் விருது வழங்கப்படுகிறது. தகுதியான கோவை மாவட்ட விவசாயிகள் <>www.tnhorticulture.tn.gov.in.இல்<<>> பதிவிறக்கி விண்ணப்பித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கலாம். சிறந்த விவசாயிகளுக்கு சான்றிதழுடன் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் விவசாயிகளுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.60,000, ரூ.40,000 வழங்கப்படும்.

News October 20, 2024

பிக்கப் வாகனம், டூவீலர் மீது மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

image

மேட்டுப்பாளையம் மதீனா நகரை சேர்ந்த மன்சூர், தனியார் வாகன உதிரிபாக கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று தனக்கு சொந்தமான டூவீலரில் கல்லாறு சென்றுள்ளார். பின்னர், வீடு திரும்பிய போது எதிரே அசுர வேகத்தில் வந்த பொலிரோ பிக் அப் வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 20, 2024

கோவை மாவட்டத்தில் இதுவரை 58 பேர் மீது குண்டர் 

image

கோவை எஸ்பி கார்த்திகேயன் இன்று மாலை விடுத்த செய்திக்குறிப்பில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை தொடரும் எனவும, இந்த ஆண்டில் இதுவரை 58 பேர் மீது கோவை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அதில் தெரிவித்துள்ளார்.

News October 20, 2024

கோவையில் 60 பள்ளி கட்டிடங்களை இடிக்க முடிவு

image

பருவமழை தீவிரமடைந்துள்ளதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் இடியும் நிலையில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை கண்டறிந்து அதனை உடனடியாக இடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள 60 கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.