India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பீகாரில் ஒரு ஏழை தம்பதிக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் பிறந்து உள்ள நிலையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது. அந்தக் குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்பட்ட அவர்களிடம் ரூ.1,500 கொடுத்து குழந்தையை தாங்களே வளர்த்துக் கொள்வதாக கூறி எடுத்து வந்துள்ளனர். அந்தக் குழந்தையைத் தான் கோவையில் ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து, குழந்தையை வாங்கிய விஜயன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார். அப்போது, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உதவி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கடந்தாண்டு சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நடிகர் விஜய், இந்தாண்டும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க முடிவு செய்துள்ளார். தவெக சார்பில் வழங்கபட உள்ள
இதில், 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதற்கட்டமாக ஜூன் 28ல் கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக இன்று கோவையில் தவெக நிர்வாகிகள் கூறினர்.
கோவை ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் பிரிவுகளில் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் அவசியம். தகுதியுடையவர்கள் ஜூன் 20ம் தேதி முன் உரிய சான்றிதழ்களுடன் கோவை கலெக்டர் அலுவலக பழைய கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள, சமூகநலத்துறையில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
கோவை மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்கில் தீர்வுகாண லோக்அதாலத் விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விசாரணையை மாவட்ட நீதிபதி விஜயா துவக்கி வைத்தார். விசாரணையில், மொத்தம் 2,843 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டது. இதன் வாயிலாக தீர்வு தொகையாக, ரூ.29.92 கோடி பைசல் செய்யப்பட்டது. 5 ஆண்டுக்கும் மேல் நிலுவையிலுள்ள 39 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
தமிழக அளவில் மாநில ஓபன் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கோவையைச் சேர்ந்த ஆகாஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கோவை வீரர் பட்டம் வெல்வது 32 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. ஆகாஷ் தனது திறமையால் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு பதக்கங்களை குவித்து வருகிறார். 2,251 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ள ஆகாஷ் விரைவில் ஐஎம் பட்டம் பெற முயற்சி செய்து வருகிறார்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தினை கண்காணிக்கும் வகையில் சூயஸ் நிறுவனத்தின் மூலமாக குடிநீர் கசிவுகள் உள்ளிட்ட புகார்களை கேட்டறிந்து உடனடியாகத் தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தின் செயல்பாடுகளை கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் டெல்லி ஜல் போர்டு தலைமை நிர்வாக அலுவலர் அன்பரசு ஐஏஎஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை சைபா் க்ரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜன.1 முதல் மே மாத இறுதி வரை நிதி தொடா்பாக 2,446, மற்ற மோசடி தொடா்பாக 906 வழக்குகள் என மொத்தம் 3,352 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.53,07,67,674. மீட்கப்பட்ட தொகை ரூ.4,31,61,707. மோசடி வழக்கு தொடா்பாக கடந்த 5 மாதங்களில் 18 போ் கைது செய்யப்பட்டு, 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 144 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள 232 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று காலை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் அன்னூர் மேட்டுப்பாளையம் என மொத்தமாக பல மையங்களில் 69,737 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடைபெறும். இதற்காக 13 பறக்கும் படைகள், 94 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் முன்பாக, கோவை மாவட்ட சுகாதாரத்துறையிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில், கொசு உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் பள்ளி வளாகங்களை, துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என இன்று கோவை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.