Coimbatore

News June 11, 2024

வடகோவை வரை இயக்கப்படும் ரயில் சேவை

image

கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை இயக்கப்படும் ரயில், இரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 13ஆம் தேதி வடகோவை ரயில் நிலையத்தோடு ரயில் நிறுத்தப்படும். அதேபோல் கோவையில் இருந்து இயக்கப்படும் மறுமார்க்க ரயில் வடகோவையில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.

News June 11, 2024

கோவையில் சந்தன மரம் வெட்டி கடத்தல்?

image

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் இல்லம், வருமானவரித்துறை அலுவலகம் என பாதுகாப்பு மிகுந்த ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இங்கு காலை, மாலை வேலைகளில் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலையின் ஓரத்தில் இருந்த சந்தன மரம் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

News June 11, 2024

கோவை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

image

கோவை விமான நிலைய அதிகாரிகள் நேற்று வழக்கமாக பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பயணி ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரூ.73,80,000 மதிப்புள்ள 1 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை கைப்பற்றினர். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பயணி சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஸ்கூட் விமானம் மூலம் வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

News June 11, 2024

மாற்று விடுமுறை வழங்க ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை

image

தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது, பணி செய்யும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு, கார்டு ஒன்றுக்கு 50 பைசா வழங்கப்படுகிறது. அதனை ரூ.5 ஆக உயர்த்த வேண்டும். ஞாயிறன்று பணியாற்றும் ரேஷன் பணியாளர்கள் மாற்று விடுமுறை எடுக்க அரசு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

News June 11, 2024

திருநங்கைகளுக்கு வரும் 21 ஆம் தேதி சிறப்பு முகாம்.

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வர் மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கிட வருகிற 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதனை திருநங்கைகள் பயன்படுத்தி பயன்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 10, 2024

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்

image

தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கியது. 21 நாட்களுக்கு நடைபெறும் இம்முகாமில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. அதன் ஒருபகுதியாக இன்று சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

News June 10, 2024

கூட்டணியுடன் ஆட்சி அமைக்க முதல்வர்தான் காரணம்

image

கோவையில் வரும் 15ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில் இந்திய அளவில் இந்தியா கூட்டணி அமைய மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பு எடுத்ததாக தெரிவித்தார். இதனால் தான் பாஜக அதிக பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது என்றார்.

News June 10, 2024

முதல்வருக்கு அழைப்பிதழ் வழங்கல்

image

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன் மற்றும் ஸ்ரீ விஜயபாமா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோரது இல்ல திருமண விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரு குடும்பத்தாரும் இன்று நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினர். இந்நிகழ்வில், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் என பலரும் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து

image

கோவை மாநகராட்சியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நாளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

News June 10, 2024

கோவையில் பெண் குழந்தை விற்பனை

image

பீகாரில் ஒரு ஏழை தம்பதிக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் பிறந்து உள்ள நிலையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது. அந்தக் குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்பட்ட அவர்களிடம் ரூ.1,500 கொடுத்து குழந்தையை தாங்களே வளர்த்துக் கொள்வதாக கூறி எடுத்து வந்துள்ளனர். அந்தக் குழந்தையைத் தான் கோவையில் ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து, குழந்தையை வாங்கிய விஜயன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!