India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை கவுண்டம்பாளையம் நீலியம்மாள் நகரை சோ்ந்தவா் முத்துகுமாா்(37). தனியாா் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் நேற்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விரைந்து சென்ற போலீசார் அங்கு விசாரணை செய்ததில் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாட பலரிடம் கடன் பெற்று பணத்தை அதில் இழந்ததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேற்று (ஜுன்11) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இன்று (12.06.2024) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஏற்க உள்ளதாக கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லுார் குளம், என 9 குளங்கள் உள்ளன. குளம் உட்பட பெரும்பாலான குளங்கள், ஆகாய தாமரையின் பிடியில் சிக்கியுள்ளன மாநகரின் நீராதாரத்தை அதிகரிக்கச் செய்யும் குளங்கள் அத்தனையும், ஆகாயத்தாமரையின் பிடியில் சிக்கியுள்ளன இந்த நிலையில் நேற்று குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் துவங்கியது.
செய்தி – மக்கள் தொடர்பு துறை சார்பில் கோவை வ.உ.சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் சேர்ப்பிக்கும் வகையில் 34 அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.10,05,915 வருவாய் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்ற சிவரஞ்சனி, கார்த்திகா, சந்தியா, ஹரிஹரன் ஆகியோருக்கு கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கத்குமார் ஜெயின், தனித்துணை ஆட்சியர் என பலரும் கலந்து கொண்டனர்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 2 நாட்கள் நடைபெற உள்ளது. சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி (ஜூன்.13), (ஜூன். 14) ஆகிய 2 நாட்கள் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில், பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் பயிற்சிகளில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் ஏழை, எளிய நடுத்தர மாணவர்கள் சில வருடங்களாக வெளி மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் வெகு சிறப்பான முறையில் செயல்படுகின்றனர். தயவுகூர்ந்து கல்வியை அரசியலாக்க வேண்டாம், மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான 353 மனுக்கள் பெறப்பட்டதாக இன்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை நீர் நிலைகளில் படிந்துள்ள மண் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். மேலும் மண் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பெற்று பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க ஏதுவாகும் வகையில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை இயக்கப்படும் ரயில், இரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 13ஆம் தேதி வடகோவை ரயில் நிலையத்தோடு ரயில் நிறுத்தப்படும். அதேபோல் கோவையில் இருந்து இயக்கப்படும் மறுமார்க்க ரயில் வடகோவையில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.