India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை வெரைட்டிஹால் சாலை அருகே அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் 9ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றதால் நிர்வாகத்தினர் மாணவிக்கு டிசி கொடுத்துள்ளனர். இந்நிலையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவி பெற்றோருடன் மனு அளித்தார். இதுகுறித்து விளக்கம் கேட்ட நிலையில் பள்ளியில் மீண்டும் மாணவி சேர்க்கப்பட்டார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமையில் திமுக முப்பெரும் விழா நடத்தவிருப்பதாக அறிந்தேன். கோவை மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை. இதில் முப்பெரும் விழா என்ற பெயரில் குப்பைகளைக் கொண்டு வந்து கோவையை குப்பைக் கிடங்காக ஆக்குவதுதான் இந்த விழாவின் விளைவாக இருக்கப் போகிறது என்றார்.
கோவை உக்கடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பேரூர் பைபாஸ் பகுதியில் உள்ள செந்தூர் காகிதம் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், நேற்று (ஜூன் 13) இவர் நிறுவனத்தைத் திறந்தபோது 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
கோவை அரசு கலை கல்லூரியில் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் , சைக்காலஜி, புவியியல், அரசியல் அறிவியல் ஆகிய பாட பிரிவுகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்று (ஜூன் 13) நடைபெற்றது. சைக்காலஜி பாடப் பிரிவை தேர்ந்தெடுப்பதில் மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் செலுத்தினர். மொத்தமுள்ள 223 இடங்களுக்கு 206 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது 17 காலியிடங்கள் உள்ளன.
கார்கில் வெற்றியின் ரஜத் ஜெயந்தி வெள்ளி விழா நினைவாகவும், வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும் தனுஷ்கோடி முதல் கார்கில் வரை இந்திய ராணுவ வீரர்கள் வாகன பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று கோவை வந்த அவர்களை சிட்டி கமிஷனர் பாலகிருஷ்ணன் வரவேற்று வாழ்த்தி பேசினார். அப்போது, ராணுவ பீரங்கி படை பிரிவின் கமாண்டிங் அதிகாரி கா்னல் ஸ்ரீதா் ராஜன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் இருந்தனர்.
மறைந்த முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களவை தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தோ்தல் வெற்றிக்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியாவில் நாளை (ஜூன் 15) நடைபெறுகிறது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள், 40 தொகுதிகளிலும் வென்ற எம்பிக்கள், கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
கோவை செல்வபுரம் பகுதியில் பழைய டூவீலர்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் தினேஷ் என்பவரிடம் கடந்த டிசம்பர் மாதம் டூவீலர் ஒன்றை அம்பிகா என்பவர் வாங்கி உள்ளார். அப்போது, தான் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் பணிபுரிவதாக கூறி போலீஸ் ஐடி, ஆதார் கார்டை வழங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக இஎம்ஐ கட்டாமல் இருந்ததால் விசாரித்ததில் போலி போலீஸ் என தெரிந்தது. இப்புகாரின்பேரில் அம்பிகா நேற்று கைது செய்யப்பட்டார்.
கோவைக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை நேற்று (ஜூன் 13) முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு தமிழக பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் பத்தில் ஒரு பங்கை நிறைவேற்ற முன்வந்தாலே கோவை மக்களின் நீண்ட நாள் ஏக்கம் தீரும். அதை விடுத்து வீண் விளம்பரத்திற்காக விழா எடுப்பதால் மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்க போவதில்லை என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 18ம் தேதி கோவையில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சுற்றுலா ரயில் இயக்கபடவுள்ளது . இந்த ரயில் காசி விசாலாட்சி ஆலயம், ராமர் கோவில் உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலாவாக சென்று வர உள்ளது. தங்குமிடம், போக்குவரத்து உணவு சேர்த்து கட்டணம், 41,150 ரூபாய் விருப்பமுள்ளவர்கள் ரயில்வே நிர்வாகத்தை அனுகலாம்.
Sorry, no posts matched your criteria.