Coimbatore

News March 12, 2025

ரயில் பயணிகள் கவனத்திற்கு 

image

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், திருச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து மார்.18 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சி-பாலக்காடு விரைவு ரயில் திருச்சி-கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கரூர்-பாலக்காடு இடையே மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

ராஜேந்திர பாலாஜி திடீர் பல்டி! 

image

கோவை ஏர்போர்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அளித்த பேட்டியில், எத்தனை கட்சிகள் வளர்ந்தாலும் அதிமுகவை எதிர்க்கின்ற தகுதி திமுகவுக்கும், திமுகவை எதிர்க்கின்ற தகுதி அதிமுகவுக்கும் தான் உண்டு. தமிழக அரசு என்ன நிதி கேட்கிறார்களோ அதை ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும். அப்போது தான் நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். முன்னாள் அமைச்சர் மா.பா பாண்டியராஜனை குறிப்பிட்டு பேசவில்லை என்றார்.

News March 12, 2025

கோவையில் கிராம சபை கூட்டம்

image

மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தை ஒட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினத்தில் குடிநீர் சிக்கனம், குடிநீர் பயன்பாடு, மழைநீர் தொட்டி பராமரிப்பு, குடிநீர் மாசுபாடு, குளம் குட்டைகளை தூர்வாருதல் போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என செய்தி குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News March 12, 2025

கோயம்புத்தூருக்கு மழை

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இன்றும் கோவை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. ( Share பண்ணுங்க)

News March 11, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச்.11) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News March 11, 2025

கோவையில் 5 வயது பெண் சிறுத்தை உயிரிழப்பு!

image

கோவை ஓணாப்பாளையத்தில் பிடிபட்ட 5 வயது பெண் சிறுத்தை உயிரிழநதுள்ளது. கடந்த வாரம் 4 ஆடுகளை வேட்டையாடிய இச்சிறுத்தையை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இந்நிலையில், ஏற்கனவே காயமடைந்து உடல் மெலிந்து காணப்பட்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழநதுள்ளது. 

News March 11, 2025

பொண்ணுக்கு வீங்கி நோய்! மக்களே உஷார் 

image

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர் எவருக்கேனும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு கண்டறியப்பட்டால், சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும், பாதிப்படைந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘மம்ப்ஸ்’ என்ற வைரஸ் வாயிலாக பரவும் பொன்னுக்கு வீங்கி நோயானது காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

News March 11, 2025

கொடநாடு வழக்கு: Ex.பாதுகாப்பு அதிகாரி ஆஜர் 

image

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் தற்போது காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்து உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

News March 11, 2025

கோயில் தேரோட்டம்: போக்குவரத்து மாற்றம்

image

காரமடை ரங்கநாதர்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை (மார்ச்.12) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து செல்லும் வாகனங்கள் குட்டையூர், காந்தி நகர், தொட்டிபாளையம், ஒன்னிபாளையம், மத்தம்பாளையம் வழியாக கோவை செல்லலாம். கோவையிலிருந்து வரும் வாகனங்கள் மத்தம்பாளையம், ஏழு சுழி, திம்மம்பாளையம், எம்கே புதூர், டீச்சர்ஸ் காலனி வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம்.

News March 11, 2025

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் ஆய்வில்: மத்திய அரசு

image

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் தமிழ்நாடு அரசிடம் இருந்து 2024 டிசம்பரில் வந்தன என்றும், தமிழ்நாடு அரசின் இந்த திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன என்று மாநிலங்களவையில் மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்துள்ளார். இன்னும் பரிசீலனையிலேயே உள்ளதால் ரயில் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!