India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை ஈஷா சார்பில் மின்தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், முற்போக்கு அமைப்புகள் சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சில தினங்களுக்கு முன் சம்பவ இடத்திற்கு சென்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. இந்நிலையில், ஈஷா யோகா மைய ஆட்கள் மூவர் மீது ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோவை கீர்த்தி ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி, ஹரி காஸ்ட்யூம்ஸ் இணைந்து லிட்டில் லேம்ப் நர்சரி பிரைமரி பள்ளியில் நடத்திய நிகழ்வில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா என உலகில் உள்ள 195 நாடுகளின் தேசிய கொடிகளையும்,195 முட்டைகளின் மேல்பகுதியில் ஆறு மணி நேரத்தில் வரைந்து மாணவர்கள் நேற்று சாதனை புரிந்தனர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. மாணவர்களை பாராட்டி பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சென்னை விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், கோவை விமான நிலையத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விமான நிலைத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடக்கிறது.
சென்னை ஒத்திவாக்கத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கோயம்புத்தூர் இரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் ரூபாவதி இன்று 300 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று முதல் பரிசை வென்றுள்ளார். அவரை சக போலீசார், உடன் பணி புரியும் ஊழியர்கள் பாராட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் நடப்பாண்டில் முதலாமாண்டு சேரும் மாணவிகளில் தகுதியானவர்களின் பெயர்களை, சமர்ப்பிக்க கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு,
சமர்ப்பிக்க பட்டியலில், சிலரது மொபைல் எண், வங்கி கணக்கு இல்லாமல் பதிவு செய்துள்ளனர்.
அவர்களிடம் உரிய ஆவணங்களை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் இதுவரை 275 மாணவிகள் பெயர்கள் தரப்பட்டுள்ளது சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 30° முதல் 34 டிகிரியும், குறைந்தபட்சம் 22 முதல் 24 டிகிரியும் காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், காற்று மணிக்கு 16 முதல் 20 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் எனவும் வரும் 3 நாட்களுக்கு தூரல் மழை எதிர்பார்க்கப்படுகிறது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
ஆழியாறுக்கு விடுமுறை நாட்களில், அதிகமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணியர் பூங்காவிற்கு வந்தனர். பூங்கா வழியாக செல்லும் தண்ணீரில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். கடந்த 3 தினங்களில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு வந்து சென்றனர் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலை எண் – 209, கோவை முதல் பொள்ளாச்சி வரை சாலை விரிவாக்கப்பணிக்காக குறிச்சி முதல் ஆச்சிப்பட்டி வரை நான்கு கட்டங்களாக நில எடுப்பு செய்யப்பட்டுள்ளது. உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க ஜூன்.18 மற்றும் ஜூன்.19 ஆகிய தேதிகளில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நில இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது என்றார்.
கோவையில் கடந்த மே.1ஆம் தேதி முதல் இன்று வரை மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 93 நபர்களை கைது செய்து 56 பேர் மீது வழக்குபதிவு செய்தும், 37 பேரை எச்சரிக்கை செய்தும், அவர்களிடம் இருந்து சுமார் 179கிலோ 895 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியின் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நாளை (ஜூன்.18) காலை 11.00 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்துவரி பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மனுக்கள் மூலமாக மேயரிடம் நேரடியாக வழங்கலாம் என இன்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.