India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் நடைபெறவுள்ள உலக யோகா தினத்தை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா். இதற்காக சென்னையிலிருந்து இன்று இரவு 7 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையம் வரும் ஆளுநா் அங்கிருந்து காா் மூலம் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை விருந்தினா் மாளிகைக்கு சென்று தங்குகிறாா் . தொடர்ந்து நாளை நிகழ்ச்சிகள் பங்கேற்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் ஆதரவில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகின்றது. கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என நேற்று (ஜுன்.19) கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் மில்லிங் செய்த சாலையால் வாகன ஓட்டிகள் பாதிப்பு. வடகோவை – டாடாபாத், மேற்கு பவர்ஹவுஸ் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க பழைய தார் சாலையை கடந்த 1 மாதத்திற்கு முன்பு மில்லிங் செய்தனர். அதனால் இந்த சாலைகளில் வரும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதனால் இந்தப் பகுதியில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளின் பெயர்களில் ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்றால், பள்ளிகளின் பெயர்களில் மத அடையாளங்களும் இருக்கக் கூடாது. பள்ளிகளின் பெயர்களில் இருந்து ஜாதி அடையாளங்கள் நீக்கப்படும் போது, மத அடையாளங்களும் நீக்கப்பட வேண்டும். அதுவே, உண்மையான சமூக நீதி, சந்துரு குழுவின் பரிந்துரையை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று, கோவையில் ஜமாபந்தி வருவாய் தீர்ப்பாயம் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நாளை (ஜூன்.20) முதல் ஜூன்.28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல், நில அளவை செய்தல், முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அதிகாரியிடம் வழங்கி தீர்வு காணலாம் எனக் கூறினார்.
Way2News செய்தி அப்ளிகேஷனை சந்தைப்படுத்த மேலாளர்கள் தேவை. கோவையில் 2 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவமிக்கவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். புதிய பயனாளர்களை Way2News பயன்படுத்த வைக்கும் திறமையாளர்களுக்கு முன்னுரிமை உண்டு. எங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்பினால், உங்கள் Resumeஐ balaswamy@way2news.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
கோவை உட்பட 5 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழைபெய்து வந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஜூன். 22ஆம் தேதி மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டு ஜூன்.12ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டன. இதன் பட்டியலை இன்று (ஜூன்.19) பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார்.
Sorry, no posts matched your criteria.